அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட பத்தேகம பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட பத்தேகம பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் விசேட குழுவினர் விஜயம்-பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு

காலி மாவட்டத்தின் பத்தேகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ மற்றும் சிவன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பல்வேறு உதவிகளை வழங்கி வைத்தள்ளது.
வடக்கில் இருந்து சென்ற குழுவினரும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்களுமாக சுமார் 85ற்கு மேற்பட்டவர்கள் இணைந்து உதவிகளையும்,சிரமதானப்பணிகளையு ம்  மேற்கொண்டிருந்தனர்.
-இதன் போது பாதீக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
-இதன் போது பாதீக்கப்பட்ட இடங்களில் சிரமதானப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ வின் கொள்கை பரப்புச் செயலாளரும்,சிவன் பவுன்டேசன் நிறுவுனருமான  கணேஸ் வேலாயுதம், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப்பணிகள் மற்றும் சிரமதானப்பணிகளை முன்னெடுத்தனர்.இவர்களுடன் இணைந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாண சபை உறுப்பினருமான வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர்; சிரமதானப்பணிகளை மேற்கொண்டார்.

பத்தேகம பகுதியில் வெள்ளத்தால் பல வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இரு வீடுகளுக்கு மாத்திரமே தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பாதீக்கப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இவ்விடையம்  தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உரியவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர் அவர்களிடம் சிவன் அறக்கட்டளையின் சார்பில் 3 இலட்சம் ரூபாய் பெறும்தியான காசோலையும் வழங்கப்பட்டது.

-சிரமதானப்பணிகளை தொடர்ந்து பத்தேகம பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேசசெயலர் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்  நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

 பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.

தென் மாகாணத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிதுவம் இன்மையால் தாங்கள் தொடர்ச்சியாக கல்வி மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பாட்டு மக்கள் தெரிவித்தனர்.

-இதன் போது பாதீக்கப்பட்ட மக்களுக்கு தாம் தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்தார்.

வடக்கில் இருந்து வந்த குழுவினர் இன்று திங்கட்கிழமையும் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-















வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட பத்தேகம பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் Reviewed by Author on June 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.