அண்மைய செய்திகள்

recent
-

மகாராணியை சந்திக்கிறார் தெரேசா மே: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்......


பிரித்தானிய நாட்டு பொது தேர்தலில் அதிக தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க உரிமை கோரும் வகையில் பிரதமர் தெரேசா மே மகாராணியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் நடைபெற்ற பொது தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட தொழிலாளர் கட்சியை விட கூடுதலாக தொகுதிகளை வென்றுள்ளதால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது.

பிரித்தானியாவில் உள்ள 650 தொகுதிகளில் 649 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில், 318 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியினரும், 261 இடங்களில் தொழிலாளர் கட்சியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனினும், இருக்கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. அதேசமயம், ஜனநாயக யூனியன் கட்சியுடன் கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயக யூனியன் கட்சியிடம் தற்போது 10 தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து ஆட்சி அமைக்க தெரேசா மே அதிகாரம் கோர உள்ளதாக தெரிகிறது.

பிரித்தானிய நேரப்படி 12.30 மணியளவில் பங்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணியை தெரேசா மே சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட Ukip வெற்றி பெறாததால் அக்கட்சியின் தலைவரான Paul Nuttall பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
12.30 மணியளவில் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் தெரேசா மே, எலிசபெத் மகாராணியை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி பெறவுள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.


பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பணயம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் 650 தொகுதிகளில் 648 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது.

தெரசா மே-வின் கன்செர்வேடிவ் கட்சி    316
ஜெர்மி கார்பைன் லெபர்    261
ஸ்காட்டிஸ் நெசனல் செக்யூரிட்டி    35
லிபரல் டெமோகரட்டி    12
இதர கட்சிகள்    23

பிரித்தானியாவுக்காக கடமையாற்ற தயாராக இருக்கிறேன்- ஜெர்மி கோர்பின்
டொலர் மற்றும் யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி 2 வீதத்தில் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெரும்பான்மையை நிரூபிக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலில் Conservative Party- க்கு 315 இடங்களும், Labour Party - க்கு 261 இடங்கள் கிடைத்துள்ளன.


பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட வாய்ப்பு. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சந்தேகம்- பிபிசி

June 09, 201704:49 AM
தற்போது வரை வெளியான முடிவுகளின் படி, 192 பெண் எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

June 09, 201704:33 AM
Walthamstow தொகுதியில் 80.5 சதவீத வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார் Stella Creasy.

அவர் டுவிட்டரில், இந்த வெற்றியால் வாயடைத்து போய்விட்டேன், எதிர்காலம் சிறப்புற தொடர்ந்து எனது சமூகத்தினருக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.


Conservative Campaign Headquarters உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் பிரதமர் தெரேசா மே.


Croydon Central தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வீட்டு வசதித்துறை அமைச்சர் Gavin Barwell தோல்வியை தழுவியுள்ளார்.


பிரித்தானிய பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்று வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பினை நிரூபிக்கும் விதமாக, தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் படி, தொழிலாளர் கட்சியே அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

June 09, 201702:44 AM
பிரித்தானிய பொதுத்தேர்தலில் Conservative Party தற்போதைய நிலவரப்படி 190 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வரை பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 8,060,411 ஆகும். Conservative Party 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி Labour Party பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 7,859,260 ஆகும்.
Islington North தொகுதியில் ஜெர்மி கோர்பின் அபார வெற்றி பெற்றுள்ளார். 40, 086 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த ஜெரமி கோர்பின், இங்கு வந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி, இன்று ஜனநாயக நாள், நான் வாக்களித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு கூகுள் டூடூல் மூலம் கௌரவப்படுத்தியுள்ளது.





மகாராணியை சந்திக்கிறார் தெரேசா மே: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்...... Reviewed by Author on June 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.