அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை நீதித்துறை செயற்பாடு மந்தகதியில்! 7 லட்சம் வழக்குகள் நிலுவையில்...


இலங்கையின் நீதிமன்றங்களில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் வருடாந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உயர் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 566 வழக்குகளும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4ஆயிரத்து 837 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

மேலும், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் 5 ஆயிரத்து 973 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 3 ஆயிரத்து 758 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

அத்துடன், நீதவான் நீதிமன்றங்களில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 644 வழக்குகளும், ஒரு லட்சத்து 42 ஆயிரம் 749 வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை நீதித்துறை செயற்பாடு மந்தகதியில்! 7 லட்சம் வழக்குகள் நிலுவையில்... Reviewed by Author on June 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.