அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவை ஆளப் போவது யார்? வாக்குபதிவு தொடங்கியது!


பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

தபால் ஓட்டுகள் சில ஏற்கனவே போடப்பட்டு விட்டன. பள்ளிக்கூடங்கள், சமூக மையங்கள், சமுக மன்றங்கள் போன்ற இடங்களில் வாக்குபதிவு நடைபெற உள்ளன.


பிரித்தானியாவில் ஊடக, சமூக வலைதளங்களில் பிரபலமான 22 பேர் ஜெரமி கோர்பினையும் 4 பேர் மட்டும் பிரதமர் தெரேசா மேவையும் ஆதரித்து வாக்களித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


West Belfast தொகுதியில் போட்டியிடும் Alliance party வேட்பாளர் Sorcha Eastwood புதிதான திருமணம் செய்து கொண்ட தனது கணவர் Dale Shirlow - வுடன் வந்து வாக்களித்துள்ளார். வாக்களிக்க வரும்போது இவர்கள் இருவரும் திருமண ஆடையில் வந்துள்ளனர்.

ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு
லண்டன் தாக்குதலின் போது ஹீரோவாக செயல்பட்ட Geoff Ho தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எதிர்பாராதவிதமாக இன்று என்னால் வாக்களிக்க முடியவில்லை, உங்கள் அனைவரையும் வாக்களிப்பதற்காக ஊக்கப்படுத்துகிறேன், மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! நன்றி என பதிவிட்டுள்ளார்.


மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பிரித்தானியா மக்கள்
LibDem தலைவரான Tim Farron-யை படமெடுக்க முயன்ற போது புகைப்பட நிருபர்களுக்கும், கமெராமேன்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பிரித்தானியாவை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த ஜெரமி கோர்பின், இங்கு வந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி, இன்று ஜனநாயக நாள், நான் வாக்களித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் தெரெசா மே ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் SNP தலைவர் Nicola Sturgeon தனது வாக்கினை பதிவு செய்தார்.

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் பொதுமக்கள் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு கூகுள் டூடூல் மூலம் கௌரவப்படுத்தியுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபராக இருப்பின் உங்களுக்கென்று குறிப்பிட்டுள்ள Polling Stations-ல் வாக்களிக்க வேண்டும், இதுபற்றிய மேலதிக தகவல்களை https://www.yourvotematters.co.uk/இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

இன்று இரவு 10 மணிக்கு வாக்குபதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் நடு இரவிலிருந்து வெளியாக தொடங்கும்.

தேர்தலின் முழு முடிவுகள் நாளை மதியத்துக்குள் தெரியவரும்.

கடந்த 2015ல் நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 331 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

தற்போது பன்முனை போட்டி நிலவினாலும் தெரசா மே சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்கட்சி தலைவரான ஜெர்மி கார்பன் சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சிக்கும் தான் பலத்த போட்டி நிலவுகிறது.

இதுவரை மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் பலவற்றில் தெரசா மேவும் அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியும் தான் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியாவை ஆளப் போவது யார்? வாக்குபதிவு தொடங்கியது! Reviewed by Author on June 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.