அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஒரே இன்னங்ஸில் மூன்று சாதனை படைத்த கோஹ்லி...


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி ஒரு இன்னிங்ஸில் மூன்று சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி இந்திய அணி 240 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார்.

இதையடுத்து இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டுத் தொடர்களில் வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.

அவர் 17 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார், இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லி அடிக்கும்17 வது சதம் இதுவாகும். மேலும், அணித்தலைவராக அவர் அடிக்கும் 10 வது சதமாகும். அதிவேகமாக 10 சதங்கள் அடித்த அணித்தலைவர்கள் பட்டியலில் கோஹ்லி 5 வது இடம் பிடித்துள்ளார்.

இந்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது சராசரி 50 ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் 50 சராசரியை வைத்துள்ள ஒரே வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஒரே இன்னங்ஸில் மூன்று சாதனை படைத்த கோஹ்லி... Reviewed by Author on July 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.