அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு ஒழிப்புக்கு வருகிற அவசர சட்டம்.....


கொழும்பு மற்றும் சனநெருக்கடியான பிரதேசங்களில் முறையற்ற முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுவதை தடுத்தல் மற்றும் டெங்கு நோய் தொற்றல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் சனநெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண கட்டடங்களிலும், அந்நிர்மாண நடவடிக்கைகளின் சட்ட ரீதியான உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் அடங்கிய பெயர் பலகையினை தயாரித்தல் அவசியமாகும்.

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் இடம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக அவர்களின் பெயர்களிலேயே தனியார் வழக்கு தொடரல்.

உள்நுழைவதற்கு கடினமாக முறையில் முடி காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துக்களினுள் உள்நுழைந்து பரிட்சிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதித்தல்.

கட்டுப்பாட்டு அறையினை 24 மணி நேரமும் செயற்படுத்துவதற்கு அவசியமான அதிகாரிகளை அனுமதித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்.

மேலும், இவ்வாறான நடவடிக்கைகளுக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக ஆகியோரால் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கு வருகிற அவசர சட்டம்..... Reviewed by Author on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.