அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் 'Discover Mannar' புகைப்படக்கண்காட்சி மன்னாரில் ஆரம்பித்து வைப்பு

மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் 'Discover Mannar ' புகைப்படக்கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகைப்படச்சங்கம்,இலங்கை வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் மற்றும் பல்மிரா ஹவுஸ் ஆகியவை இணைந்து குறித்த கண்காட்சியை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(14) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இலங்கையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மன்னாரை பிரபல்யப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த கண்காட்சியை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

உலகின் பிரதான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை வளர்ச்சியடைந்து வருகின்றது.நாட்டின் பொருளாதாரத்தில் நுற்றுலாத்துறை முக்கிய அம்சம் வகிக்கின்றது.

மன்னாரை நிலை பேறான,பொறுப்பு வாய்ந்த சுற்றுலா மையமாக ஊக்கு விக்கும் வகையில்,EU-SDDP நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

கொழும்பில் மே மாதத்தில் இடம் பெற்ற குறித்த புகைப்பட கண்காட்சியில் 300 இற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் திறந்த மற்றும் மாணவர் பிரிவுகளில் வெளிப்படுத்தி இருந்தனர்.

-இதன் போது குறித்த புகைப்படக் கண்காட்சியில் தமது புகைப்படங்களை சமர்ப்பித்திருந்த மாணவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பதக்கம் மற்றும் மெரிட் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

-மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலை மாணவன் கமலநாதன் கணிஸ்டன் வெண்கல பதக்கத்தையும்,மன்-பத்திமா ம.வி மாணவன் எஸ்.கவின்சன்,மன்-சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி ஏ.எவ்.நிஸாலினி,மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் றொபட் செனரின் பீரிஸ்,மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவன் விஜயகுமார் திவாகர்,மன்-முருங்கன் ம.வி மாணவன் ஏ.எ.அனஸ்டன் ஆகியோர் மெரிட் விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சான்றுதல்களை வழங்கி வைத்ததோடு குறித்த புகைப்படக்கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

-இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த கண்காட்சியை அனைவரும் பார்வையிட முடியும் என ஏற்பட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளர் வி.ரி.யோகராஜா,சுற்றுலாத்துறை அதிவிருத்தி திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஏ.சலீம் உற்பட மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் 'Discover Mannar' புகைப்படக்கண்காட்சி மன்னாரில் ஆரம்பித்து வைப்பு Reviewed by NEWMANNAR on July 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.