அண்மைய செய்திகள்

recent
-

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சில குடும்பங்களை……


மன்னாரில் உள்ள ஆலயங்களில் கோவில்களில் வருடா வருடம் இடம் பெறும் திருவிழாவானது யாரை வாழ  வக்கிறதோ…… இல்லையோ…..
தங்களுடைய சுய உற்பத்திகளை விற்பனை செய்யும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சில குடும்பங்களை ஓரளவு வாழ வைக்கிறது எனலாம்….

மன்னாரில் பிரசித்தி பெற்ற மடு தோவாலயத்தில் வருடா வருடம் இரு முறை நடை பெரும் திரு விழாவின் போது தங்களுடைய சுய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து சில குடும்பங்கள் வாழ பழகி இருக்கின்றன. அதிலும் சில சிறுவர் தொழிளாலர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மடு சந்தி தொடக்கம் மடு தேவாலயம் வரையிலான  பாதையில் தேன்ääமாங்காääபாலப்பழம்ääவீரப்பழம் கச்சான் என சில விற்பனை பொருட்களோடு வாடிய முகத்துடன் திரு விழாவிற்கும் சுற்றுலாவிற்கும் வரும் தழிழ்ääசிங்கள மக்களை வரவேற்று நிற்கின்றார்கள்.
பெரிய அளவில் இலாபம் தராத தொழிலாக இருந்தாலும் தங்களுடைய குடும்ப சுமையை ஒரு அளவு குறைப்பதை இட்டு அவ் தொழிலை மகிழ்ச்சியாக செய்து வருகின்றனர்.

25 வயது வரை தந்தையின் உழைப்பை சார்ந்து வாழும் இன்றைய இளைஞர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என்பதில் சந்தோகம் இல்லை.
பணம் படைத்தவர்களேääகருனை உள்ளம் கொன்டவர்களேää உங்கள் கவனத்திற்கு கோவில்களுக்கு கோடி கோடியாய் அள்ளி கொடுப்பவர்களே இது போன்று கோவில்களை நம்பி வாழ்பவர்களுக்கு கிள்ளியாவது கொடுங்கள்.
உழைத்தே முன்னோற வேண்டும் என்று என்னும் இது போன்ற உயரிய எண்ணம் கொண்ட ஏழைகளை ஏழ்மையில் விட்டு விடாதீர்கள்   
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் என்பர்கள் அந்தச்சிரிப்பு ஆனந்தம் தரும் சிரிப்பாக இருக்கவேண்டும் நீங்கள் இறைவனைக்காணவேண்டாம் இந்த நிலையில் உள்ள சிறுவர்களைக்கண்டு ஏளனச்சிரிப்பு     சிரிக்காதீர்கள்…
முடியுமானவரை அவர்களின் பொருட்களை வாங்கி அவர்களின் குடும்பவசுமையினையும் வறுமையினையும் ஒர் அளவேனும் குறைக்க முயற்சி செய்யுங்கள்…..

கொடுப்பாருக்கு குறைவதுமில்லை அவர்கள் கெடுவதும் இல்லை…..

-ஜோசப் நயன்-
 


வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சில குடும்பங்களை…… Reviewed by Author on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.