அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட வேதசாட்சிகளை நினைவுகூர்ந்து வருடா வருடம் முன்னெடுக்கும் திருவிழா .....

மன்னார் மறைமாவட்டத்தின் அடையாளமாக திகழும் வேதசாட்சிகளின் ஆலயத்தில் இன்று 21 பங்குகளின் மக்கள் குருக்கள் அருட்சகோதரிகள் துறவியர் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் பொதுநிலையினர் அனைவரும்  கலந்து கொண்டனர்.
விசுவாசத்திற்காக தங்கள் இன்னுயிர்களை விசுவாச வித்தாக விதைத்திட்ட வேதசாட்சிகளை நினைவுகூர்ந்து வருடா வருடம் வேதசாட்சிகள் சமுக நல அமைப்பு முன்னெடுக்கும் திருவிழா.....

 இன்றைய தினம் 15-07-2017  சிறப்பாக நடைபெற்றது. இவ் விழா திருப்பலி அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய ஆயர் கின்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இவ் திருவிழாவுக்கு இந்தியாவில் காரங்காட்டில் இருக்கும் வேதசாட்சிகள் சமுகத்தை சேர்ந்த 05 அருட்தந்தையர்கள் கலந்து சிறப்பித்ததோடு வேதசாட்சி சமுக நல அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தில் ஒரு அங்கமாக அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் விளையாட்டில் திறன் பெற்றவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் கலைத்துறையில் சிறப்பானவர்களுக்கு பரிசுகளும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது.

அத்துடன் சிறப்பு நிகழ்வுகளாக.....
  • வேதசாட்சிகள் வரவேற்புமாத அழகுபடுத்தும்  அடிக்கல் பதிப்பு
  • வேதசாட்சி விளையாட்டு மைதானம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
  • மரங்கன்றுகள் நடுதல் நிகழ்வு
  • வேதசாட்சிகளின் ஆலயவளாகத்தில் உள்ள கல்லறைக்கருகில் அதன் வரலாற்று சுருக்க நினைவுகுறிப்பேடுகள் திரைநீக்கம்
  • தோட்டவெளி வேதசாட்சி சமூக நல அமைப்பின் ஆலோசகரும் ஆய்வாளருமாகிய திரு.அந்தோனிப்பிச்சை MA,M..phil  அவர்களால்ஆங்கிலமும் தமிழும் இருமொழிகளில்  எழுதிய மன்னார் மறைசாட்சிகள் கையேடு நூல் வெளியீடும் இடம்பெற்றது.
1544ம் ஆண்டு  யாழ்ப்பாணத்தினை ஆண்ட சங்கிலியமன்னனால் மதமாற்றம் செய்யமுட்பட்டவேளை அதை எதிர்த்து நின்ற மறைசாட்சிகளான 600 பேரையும் மன்னன் வெட்டிக்கொன்றான் அவ்ர்களின் விசுவாச இறப்பின் சாட்சியா இன்றும் இருப்பது தான் மன்னர்ர் வேதசாட்சிகளி ஆலயமும் நினைவிடமும்.

 மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் கருத்துப்பகிர்வில் மிகவிரைவாக  மறைசாட்ட்சிகளான இவர்களை புனித நிலைக்கு உயர்த்துவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் செபத்தின் ஊடாகவும் தபத்தின் மூலம் வேண்டுதல் செய்வோம் தொடர்ந்து செபியுங்கள் என்றார்
இறுதியாக மறைசாட்சிகளின் நினைவிடத்தில் மெழுவர்த்தி ஏற்றி செபித்தலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது.











மன்னார் மறைமாவட்ட வேதசாட்சிகளை நினைவுகூர்ந்து வருடா வருடம் முன்னெடுக்கும் திருவிழா ..... Reviewed by Author on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.