அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்....


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இணைத் தலைவர்கள் றிசாட் பதியுதின், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதோடு, பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.... Reviewed by Author on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.