அண்மைய செய்திகள்

recent
-

25 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே வருகிறார் பேரறிவாளன்...


ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளளுக்கு பரோல் வழங்க தமிழக அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உட்பட நால்வருக்கு விதிக்கபட்ட துாக்குத் தண்டனை சில ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே அடைக்கப்பட்டு, நெடு நாட்களாக தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் இவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் போரிடவருகின்றன. அது மாத்திரமன்றி, பல தரப்பட்ட அமைப்புக்களும் கோரிக்கைகளை தமிழ அரசிடமும், மத்திய அரசிடம் முன்வைத்தன.

எனினும், இதுவரை இந்தக் கோரிக்கைகளுக்கு எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தை மத்திய அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தார்.

ஆனால், மத்திய அரசு தங்கள் ஆலோசனையில்லாமல் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்று அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதனால் நால்வரின் விடுதலை குறித்த சீராய்வு மனு தற்போது உச்சநீதிமனற்த்தில் நிலுவையில் உள்ளது.

பேரரறிவாளனை தாயார் அற்புதம்மாள் இன்று வரை மகனின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்கிறார். தொடர்ந்தும் தன்னுடைய மகன் வெளியில் வருவான் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மகனின் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று இப்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து மகனின் விடுதலை குறித்து பேசியுள்ளார். ஆனால், 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இருபத்தி ஆறு ஆண்டுகளாக என் மகனுக்கு பரோல்கூட வழங்கவில்லை. தமிழக அரசு நினைத்தால் பரோலாவது வழங்க முடியும். முதலில் பரோலில் ஆவது என் மகனை விடுங்கள் என்று தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனிடையே தற்பொது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூவரும் இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசினர்.

அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைச் சந்தித்து தனது மகனுக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசும், ஏற்கனவே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அற்புதம்மாளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம், உங்கள் மகனின் பரோல் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

விரைவில் நல்ல முடிவு வெளியாகும்" என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். இதுபற்றி அரசுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது “பேரரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துவிட்டது.

ஒருமாத காலம் பரோலில் அவர் விடுவிக்கப்படலாம். அதற்கான அறிக்கை நாளை சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதன்பின் முறையான அறிவிப்பு இந்த வாரத்திலேயே வெளிவந்துவிடும். எஇந்த வாரத்தில் பேரறிவாளன் பரோலில் வருவது உறுதி என்று நம்பிக்கையோடு கருத்து வெளியிட்டிருக்கிறார் சட்ட மன்ற உறுப்பினர் தனியரசு.

பேரறிவாளின் தந்தையார் சுகயீனமுற்று இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக தான் வெளியே வரவேண்டும் என்று கோரிக்கையிருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே வருகிறார் பேரறிவாளன்... Reviewed by Author on July 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.