அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துகின்றது...


விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துவதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் , ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியமை தொடர்பில் அரசு எவ்வாறான நிலையில் இருக்கும்? குறித்த தடை நீக்கம் மூலம் தமிழ் மக்களிற்கு அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியுமா என கேள்விகள் எழுப்பப்பட்டது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "இலங்கை அரசு குறித்த விடயத்தில் திருப்தியடையாத போதிலும், விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் விலியுறுத்தியிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துகின்றது... Reviewed by Author on July 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.