அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது சா்வதேச மாநாடு......யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது.


 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய 13வது சா்வதேச மாநாடு (ஓகஸ்ட் 05, 06) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 13வது சா்வதேச மாநாட்டுத் தலைவா் முனைவா் பாஞ். இராமலிங்கம் அவா்ககளின் தலைமையில் உலகின் பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், பேராளா்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனா்.
எதிா்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான திரு. இரா சம்மந்தன் மற்றும் வடக்கு கிழக்கைச் சோ்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனா்.
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மாவை சேனாதிராசா அவா்களின் 75வது அகவையின் பவள விழா மாநாட்டு அரங்கில் சிறப்பிக்கப்பட்டது.

வெறுமனே தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழர் பண்பாடு, கலைகள் போன்ற வார்த்தைகளை மாத்திரம் மையமாக வைத்து இந்த மாநாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், எதற்காக நாம் போராடினோம். எந்த இலக்கை நோக்கிச் சென்றோம் போன்ற விடயங்கள் இல்லாத மாநாடாக இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த 1974 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப் பகுதியில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் 36 இயக்கங்கள் எமது மண்ணுக்காகப் போராடிய அந்த நினைவுகளை நாங்கள் மீட்டிப் பார்க்க வேண்டும்.

வெறுமனே மாநாடுகளை மாத்திரம் நாடாத்துவதாக எமது வரலாறு அமையக் கூடாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் போரியல் இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இவ்வாறான மாநாடுகள் எம்மை இட்டுச் செல்ல வேண்டும்.

மாவீரர்களின் தியாகம், சிந்தை, அர்ப்பணிப்புக்கள் போன்றவற்றை எமது இளம் சந்ததி உணர்ந்து கொள்ளும் வகையில் இவ்வாறான மாநாடுகள் அமைய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், பட்டிருப்புத் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் நான் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் என்றார்.

 










உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது சா்வதேச மாநாடு......யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது. Reviewed by Author on August 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.