அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் GCE (O/L) 2017 பரீட்சை எழுதும் 2500 மாணவர்களுக்கு கணிதபாட பயிற்ச்சிப்புத்தகங்களை

மன்/ பெரியமடு மகா வித்தியாலத்துடன் இயங்கிவந்த மன்/ பெரியமடு ஆரம்ப பாடசாலைக்கான புதிய வளாகத்திற்கான புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் திரு S.R.யதீஸ் அவர்கள் கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீனை ஒருசில நிமிடங்கள் மன்னார் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக அணுகிய போது எவ்வித மறுப்பும் இல்லாமல் மாணவர்களின் கல்வி உயர்வுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என உறுதியளித்த கௌரவ அமைச்சர் அவர்கள் திரு S.R.யதீஸ் அவர்களிடம்.

மன்னார் மாவட்டத்தின் மடுகல்வி வலையம் மன்னார் கல்விவலையம் இரண்டு வலையங்களைச்சேர்ந்த GCE (O/L) 2017 ம் ஆண்டு க.பொ,த சாதாரண தரப்பரீட்சை  எழுதவிருக்கும் 2500 மாணவமாணவிகளின் கணித பாடத்தின் புள்ளிகளை உயர்த்துவதற்கான செயற்றிட்டமான கணிதபாட பயிற்ச்சிப்புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கு அமைச்சர் அவர்கள்  மூன்றாம் தவணை ஆரம்பிக்கும் போது விரைவாக நடைமுறைப்படுத்துவற்கு வசதியாக தனது மன்னார் மாவட்ட இணைப்பாளரிடம் இதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு பணிப்புரையை வழங்கியுள்ளார்


இது தொடர்பாக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளரை வினவிய போது மாணவர் கல்வி உயர்வுக்காக தாராள உள்ளத்தை காட்டும் கௌரவ றிசாட் பதியுதீன் அமைச்சர் அவர்களுக்கும் கௌரவ றிவ்கான் பதியுதீன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களுக்கும் மன்னார் மாவட்ட மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிய அவர் 3 ஆம் தவணை ஆரம்பமாகி திட்டஙகள் நடைமுறைப்படுத்தப்படும் போது விளக்கமாக கூறுவதாக கூறினார்.

மன்னாரில் GCE (O/L) 2017 பரீட்சை எழுதும் 2500 மாணவர்களுக்கு கணிதபாட பயிற்ச்சிப்புத்தகங்களை Reviewed by Author on August 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.