அண்மைய செய்திகள்

recent
-

யார் முதலிடத்தில்.......ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு:


ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.

சிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

யார் முதலிடத்தில்.......ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு: Reviewed by Author on August 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.