அண்மைய செய்திகள்

recent
-

இன்னும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்படும் இந்தியாவின் முதல் தேசிய கொடி!


இந்தியாவின் 71வது வருட சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

சுதந்திரம் பெற்ற அன்று ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடி இன்றும் பத்திரமாக பாதிகாக்கப்பட்டு வருகிறது.

12 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட சுத்தமான பட்டு துணியால் ஆன இந்த கொடி 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.05 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்டது.

சுதந்திரம் பெற்ற அன்று ஏற்றப்பட்ட கொடிகளில் இன்றும் இருப்பது இந்த கொடி மட்டும் தான்.

புனித ஜார்ஜ் கோட்டையின் அருங்காட்சியகத்தில் காற்றுபுகாத மரப்பெட்டியில், கண்ணாடியால் மூடப்பட்டு 70 ஆண்டுகளாக இந்த தேசியக் கொடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெட்டிக்குள் ஈரப்பதத்தை உறிஞ்ச இந்த கொடியைச் சுற்றி 6 கிண்ணங்களில் சிலிகா ஜெல் வைக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஜனவரி 26-ம் திகதி முதல் கொடியை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.


இன்னும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்படும் இந்தியாவின் முதல் தேசிய கொடி! Reviewed by Author on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.