அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் பிரதிநிதிகள்!


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 25 விடயங்கள் ஆராயப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் 12 விடயங்களுடன் கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் (28) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிறீதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.


கல்வி, சுகாதாரம், கண்ணி வெடி அகற்றல்,காணி, போக்குவரத்து,அனர்த்த முகாமைத்துவம், மீன்பிடி, ,கூட்டுறவு, சமுர்த்தி, உள்ளிட்ட 12 விடயங்கள் ஆராயப்பட்டதோடு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல்,வீதி, விவசாயம், கால்நடை, உள்ளுராட்சி, அடங்கலாக 13 விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் கூட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு கூட்டத்தின் நிகழ்ச்சியில் 25 விடயங்கள் ஆராயப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையல் 12 விடயங்களுடன் கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த விடயங்கள் தொடர்பில் தேவைகளையும் குறைபாடுகளையும் தெரிவிக்க வருகை தந்த மக்கள் பிரநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, நீண்ட கால இடைவெளிக்கு ஒரு முறை இடம்பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் இயலுமான வரை எல்லா விடயங்களும் ஆராயப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், குணசீலன் மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரத்தினம், பசுபதிபிள்ளை மற்றும் மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும், மீண்டும் அதே விடயம் அடுத்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனவும் பொதுமக்கள் ஊடகவியலாளா்களிடம் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் பிரதிநிதிகள்! Reviewed by Author on August 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.