அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தி....


அமெரிக்காவின் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 16 வருடங்களாகின்றன

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி…

தீவிரவாதத்தின் கோர விளைவுகளை உலகம் அறிந்துகொண்ட நாள்…

2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8.45 மணி….

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தில் உள்ள உலக வர்த்தக மையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 வகை விமானம் ஒன்று 20,000 கலன் அளவுள்ள எரிபொருளுடன்,வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதியது.

இதன் விளைவாக உடனடியாக நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர்.

பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

எதிர்பாராத விபத்து என்று எண்ணி, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, முதல் தாக்குதல் இடம்பெற்று சரியாக 18 நிமிடங்கள் கழித்து மற்றொரு போயிங் 767 வகை விமானம் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது.

இதன் விளைவாக பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மொத்த அமெரிக்காவையே அதிர வைத்தது.

அலகொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள் அவற்றில் இரண்டு விமானங்களை நியூயோர்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.

இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 246 பொதுமக்கள், 19 தீவிரவாதிகள் உள்பட மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தி.... Reviewed by Author on September 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.