அண்மைய செய்திகள்

recent
-

முதன்முதலாக சந்திரனில் தரையிறங்கியது லூனா-2 விண்கலம் (செப்.14, 1959)


லூனா என்பது 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும்.

சந்திரனில் முதன்முதலாக தரையிறங்கியது லூனா-2 விண்கலம் (செப்.14, 1959)
லூனா என்பது 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். மனிதனால் அமைக்கப்பட்ட லூனா 2 விண்கலம் கடந்த 1959-ஆம் ஆண்டு இதே தேதியில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்பிறகு சந்திரனுக்கு பதினைந்து லூனாக்கள் அனுப்பப்பட்டன. அவை அனைத்தும் வெற்றிகரமானவையாகும். இவை அனைத்தும் சந்திரனைச் சுற்றவும், தரையிறங்கவும் அனுப்பப்பட்டவை ஆகும்.  இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1954 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

• 1982 - லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

• 2005 - நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

தட்டச்சு நாடா கண்டுபிடிக்கப்பட்ட நாள் (செப்.14, 1886)
20-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. 1980களில் கணினிகளும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய சொற்களை திருத்தும் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவி செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.

பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுக் கருவிகளையே பயன்படுத்த ரஷ்யா 2013 ஜூலை மாதம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான தட்டச்சு கருவிகளில் பயன்படுத்தும் நாடாவை கடந்த 1886ஆம் ஆண்டு இதே தேதியில் கண்டுபிடித்தனர்.

 



முதன்முதலாக சந்திரனில் தரையிறங்கியது லூனா-2 விண்கலம் (செப்.14, 1959) Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.