அண்மைய செய்திகள்

recent
-

புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898)


'ஹனிபல் குட்வின் செலுலோயிட்' என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.

புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898)
'ஹனிபல் குட்வின் செலுலோயிட்' என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

* 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.

* 1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.

* 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

* 1949 - இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது

* 1953 - நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

* 1968 - அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

* 1971 - நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

* 1993 – நார்வேயில் இடம்பெற்ற ரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

* 1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.

* 1999 - மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.


தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் 1989-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் (13-9-1989)
தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி என்பது 1948- 90-ம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இதனை எதிர்த்து  1989-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.






புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898) Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.