அண்மைய செய்திகள்

recent
-

காலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை


தொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அடுத்த சில நாட்களிலேயே அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.

காலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை
காலை உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல், போதிய சத்தில்லாத காலை உணவைச் சாப்பிடுவது போன்ற செயல்களால், அப்போதே எனர்ஜி குறையும். அதற்கடுத்த வேளைகளில் சத்தான உணவு களைச் சாப்பிட்டாலும்கூட அவற்றின் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்காது. இதை improper metabolism என்போம். இதனால் மூட்டுவலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிக அளவில் வரும். இதுபோன்ற காரணங்களால்தான், 35 வயது தாண்டிய மேலானதுமே பலரும் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நம் உடலுக்கு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையிலும் தேவையான எனர்ஜி, பசி உணர்வின் மூலமாக நமக்குத் தெரியப்படுத்தப்படும். அப்போது உடலின் எனர்ஜி லெவல் குறைந்து ஜீரோவை அடையும். பசிக்கு ஏற்ப சரியான அளவில் சாப்பிட்டுவிட்டால், போதுமான ஆற்றல் கிடைத்து, அது பாசிட்டிவ் எனர்ஜி பேலன்ஸாக மாறி, உடலின் அடுத்தடுத்த‌ செயல்பாடுகள் சரியாக நிகழும். சாப்பிடாமல் காலதாமதம் செய்தாலோ, எனர்ஜி லெவல் இன்னும் குறைய ஆரம்பிக்கும்.

அந்த நிலை தொடரும்போது, உடலுக்குள்ளேயே இருக்கும் பழைய சத்துகளைப் பயன்படுத்தி உடலின் அடுத்தடுத்த ரியாக்‌ஷன்கள் நடக்கும். இது நெகட்டிவ் எனர்ஜி பேலன்ஸ் எனப்படும். இது மிகவும் அதிகமானால் மயக்கம், சோர்வு, குறை ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.



பருமனாக  இருப்பவர்கள், சாப்பிடுவதை கைவிட்டாலே  காலையில் எடை குறையும் என நினைப்பார்கள். அது உண்மை யல்ல… பசிக்கு ஏற்ப சாப்பிட்டு, அவற்றைக் கரைக்கும் அளவுக்கு வேலை செய்தாலே தேவையற்ற பருமன் ஏற்படாது. காலை உணவைத் தவிர்க்கும் மாணவர்களுக்கு கவனச்சிதறல், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, பிரதான வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகும்.

இரவுப்பணிக்குச் செல்பவர் களில் பலர் காலையில் வீடு திரும்பியதும் உடனே படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனாலும் உடலின் எனர்ஜி லெவல் குறையும். உடல்நலம் பாதிக்கப்படும். இவர்களைப் பொறுத்தவரை காலை உணவே டின்னர். அதற்குப் பிறகு தூங்குவதுதான் இரவுத் துயில். மீண்டும் எழுந்து சாப்பிடுவதுதான் பிரேக்ஃபாஸ்ட். எனவே, காலையில் எழுந்து வேலைக்குச் செல்பவர்கள் கடைப்பிடிக்கும் அனைத்து உணவுப் பழக்கவழக்கங்களையும் இவர்களும் தவறாமல் செய்ய வேண்டும். ஒரே வித்தியாசம், பகல்-இரவு மாறுபாடு மட்டுமே!

ஸ்கிம்ப்பிங் (skimping)…  இது முழுமையாகச் சாப்பிடாமல் அரைகுறையாகச் சாப்பிடுவதால் முழுமையான சத்துகள் கிடைக்காத நிலை. அதனால்தான் பிரேக்ஃபாஸ்டிலேயே தேவையான சத்துகள் கிடைக்கும் வகையில் நல்ல உணவு சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அடுத்த சில நாட்களிலேயே அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.

காலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை Reviewed by Author on September 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.