அண்மைய செய்திகள்

recent
-

சர்வமதக் கூட்டம் எதற்காக கூடியது?



நடுநிலையோடு நின்று நிதானமாகச் சிந்திப்பவர்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு சிலர் சிந்திப்பார்களாக இருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் சபை ஏறுவதில் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை என்பது மிகவும் இக்கட்டானதாக இருப்பதைக் காண முடியும்.
சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாகச் செயற்படுபவர்கள் தமிழ் இனத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது.

எனினும் அத்தகையவர்கள் தமிழ் மக்க ளின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு ஆட்சியாளர்களின் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாகப்பாடுபடுகின்றனர்.

அதேநேரம் இவர்கள் நமக்கு உரிமை பெற்றுத்தருவார்கள் என தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு கவ னிக்கத்தக்கது.

இங்குதான் தமிழ் மக்கள் ஏமாந்து போகின்றனர். நம்மவர்களே நம்மை ஏமாற்றி நமக்கு எதிரானவர்களுக்குப் பந்தம் பிடிக்கின்றனர் என்றால் தமிழினம் வாழ்வதென்பது எங்ங னம் சாத்தியமாக முடியும்.

ஆக, எதை எடுத்தாலும் அதற்குள் பேரின வாதத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இருக் கவே செய்கிறது.

அண்மையில் சர்வமதத் தலைவர்களின் கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகி யிருந்தது.

அஸ்கிரிய பீடாதிபதி உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அஸ்கிரிய பீடாதிபதி தவிர்ந்த ஏனைய சம யத் தலைவர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

இதில் சிலர் வைத்த கருத்துக்கள் மக்கள் சமூகம் சார்ந்தவை. இன்னும் சிலர் தங்கள் மதம் சார்ந்த பிரச்சினைகளை எடுத்தியம்பினர்.

எந்தச் சமயத்தில் இருந்து எவர் கதைத்தாலும் இதற்கெல்லாம் பதில் கூறுகின்ற பொறுப்பு அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதியிடமே இருந்தது.

சர்வமதத் தலைவர்களின் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கியதால் பதில் அளிப்பது அவரின் பொறுப்பு என்பதற்காக அவர் பதில் அளிக்கவில்லை.

மாறாக இலங்கையில் தாம் அசைந்தால் மட்டுமே எதுவும் அசையும் என்ற அதிகாரம் தங்களிடமே இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அஸ்கரிய பீடாதிபதி பதில் அளிப்பதாக இருந்தது.

எல்லாப் பிரச்சினைகளையும் கேட்ட அஸ்கிரிய பீடாதிபதி தனது பதிவில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீளவும் ஆரம் பிப்போம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியா லயம் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற செய்தியை அறிவிப்பதற்கு சர்வமதத் தலைவர் கூட்டம் எதற்காக? என்பதுதான் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியால யம் ஆரம்பிக்கப்படுமென்ற செய்தியை இந்த நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தால் அது சம்பந்தப்பட்ட பொருத்தப்பாடு எனலாம்.

ஆனால் அஸ்கிரிய பீடாதிபதி ஏன் அப்படியொரு அறிவித்தலை தெரிவித்தார் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

ஆக, யாழ்ப்பாணத்தில் சிங்கள பாடசாலை களை நிறுவுகின்ற ஒரு திட்டத்தை பெளத்த பீடங்கள் பொறுப்பெடுத்துள்ளன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

என்ன செய்வது எங்கள் அரசியல்வாதிகளே அவர்களுக்காக கதைக்கும்போது தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்.

சர்வமதக் கூட்டம் எதற்காக கூடியது? Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.