அண்மைய செய்திகள்

recent
-

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க பொன்சேகா தயார்!


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் சில குற்றங்கள் குறித்து தாம் சாட்சியமளிக்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி போரின் போது இடம்பெற்ற சில குற்றங்களுடன் ஜெகத் ஜயசூரிய தொடர்புபட்டுள்ளதாகவும், அது குறித்து சாட்சி வழங்க தாம் தயார் என்றும் அவர் குறி ப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட் மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரெவிஸ் சின்னையா ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெகத் ஜெகசூரிய என்ற இராணுவ அதிகாரியை இராணுவ தளபதியாக நியமிக்க வேண்டாம் என அப்போதைய ஜனாதிபதி யான மகிந்த ராஜபக்ஷவிடம் நான் கூறினேன். அவரை விட சிரேஷ்ட அதிகாரிகள் 17 பேர் இருந்தனர். எனினும் அவர்களை தவிர்த்து அப்போதைய ஜனாதிபதியும் பாது காப்பு செயலாளரும் தமது நலன்களுக்கான கனிஷ்ட அதிகாரியான ஜெகத் ஜெகசூரியாவை இராணுவ தளபதியாக நியமித்தனர்.

நான் யுத்தத்தை வழிநடத்தியபோது ஜெயத் ஜெயசூரிய வவுனியா கட்டளை தளபதியாக இருந்தார். அங்குள்ள பதுங்குழியை அவதானித்து கொள்வதே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும்.

அதிலிருந்த சிப்பாய்கள் அவருக்கு கீழ் இருந்தனர். எனினும் போர்க்களத்தில் படையணிகளுக்கு சேவை வழங்கும் பணி வழங்கப்பட்டிருந்தது.

அவர் போராட்டத்தை வழி நடத்தவில்லை. எனினும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அவரின் கீழ் இருந்தனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக சில குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

அவர் இராணுவத்தளபதியான பின்பும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதாக நான் கருதுகின்றேன்.

அவ் குற்றம் தொடர்பில் என்னிடம் தகவல்கள் உள்ளன. உரிய சட்டநடவடிக் கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் அதன் போது சாட்சியினராக முன்னிலையாகி குற்றம் தொடர்பில் விரிவாக விளக்கம் அளிப்பேன்.

அவர் குற்றம்  இழைத்தார் என்பதை நான் அறிந்திருந்தேன். அவை தொடர்பில்  விசாரணை ஆரம்பிக்க நான் முயற்சித்தேன்.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக அவருக்கு உதவியாளராக இருந்த லெப்ரினன்ட் ஒருவரை கைது செய்தேன். அந்த விசாரணைகள் ஆரம்பிக்கும் பொழுது இராணுவ தளபதி பதவியிலிருந்து என்னை நீக்கினர்.

அவர் இழைத்த குற்றங்களுக்கு அப்போதைய ஆட்சியாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆசீர்வாதம் கிடைத்ததற்கான தகவல்கள் என்னிடம் உள்ளன. சட்டரீதியாக நடவடிக்கை ஒன்று இடம்பெற்றால் நீதிமன்றத்துக்கு  செல்ல வேண் டிய அவசியமில்லை.

ஜெகத் ஜெயசூரிய இழைத்த குற்றம் தொடர்பில் நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென நான் நினைக்கின்றேன். அது நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் குடிமகன் என்ற வகையில்  எனது கடமையை நான் நிறைவேற்றுவேன் என்றார் பொன்சேகா.         

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க பொன்சேகா தயார்! Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.