அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணணியில் முகம்....கலாபூஷணம் விருதுபெற்ற மணிக்குரலோன் அம்புறோஸ் குலாஸ்



கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மைக்காண வருகின்றார் கலாபூஷணம் விருதுபெற்ற மணிக்குரலோன் என அழைக்கப்படும் சூசை அம்புறோஸ் குலாஸ்(எஸ்.எ.குலாஸ்) அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் 8ம்வட்டாரம் பேசாலை எனது தந்தை செல்லையா சூசை குலாஸ் தாய் அகஸ் ரீன் செபமாலை டயஸ் எனது மனைவி அம்புறோஸ் சின்னமலர் பீரிஸ் பிள்ளைகளுடன்  பேசாலையில் தான் இருக்கின்றேன் மிகவும் சந்தோசமாக சமயப்பணியோடு கலைப்பணியும் ஆற்றிவருகின்றேன்.

தங்களது இளம்பராயம் பற்றி---
எனது இளம் பராயம் மகிழ்ச்சியானதுதான் நான் தற்போது சாதாரண தரம் O\Lஎனப்படும் அப்போது SSC மட்டும்தான் படித்தேன் பரீட்சை எழுதும் நேரத்தில்தான் எனது தந்தை திருகோணமலைக்கு வாகனம் ஒன்று வாங்குவதற்கு சென்றார் என்னைக்கேட்டதும் நானும் வாகனத்தில் பயணம் போகும் ஆசையில் புறப்பட்டேன் அப்போது படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லை எனக்கும் பெற்றோருக்கும் தான் அப்படியே போனதுதான் படிப்பு…

தங்களுக்கு நாடகம் எழுதும் ஆர்வம் பற்றி---
எனக்கு சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது ஏனெனில்  பெரிய .CRகொப்பி வேண்டி எனக்கு தோன்றும் கற்பனைக்கதாப்பாத்திரங்களை அமைத்து எழுதுவேன் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இப்படியாக எழுதியகொப்பியை ஒரு நாடகம் எழுது ம் நண்பனிடம் காட்டினேன் அதைவாங்கி பார்த்துவிட்டு இதுநாடகமா..... இதைமக்கள் ஏற்பார்களா..... என்று ஏளனம் செய்தார். அப்படியான சூழலில் நானே எழுதி தயாரித்து  சினிமாப்படங்களில் வருவதுபோல புரஜெக்ரரில் பெயர்வரவைத்து  மேடைநாடகத்தினை அரங்கேற்றினேன் அபாரவெற்றியும் கண்டேன் அந்த நண்பர் தான் எனது திறமையை உசுப்பிவிட்டார். நாடகத்தில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டேன்.

நாடகம் தவிர்ந்து ஏனை விடையங்கள்---
நாடகம் எனது விருப்பத்திற்குரிய துறை(நெறியாளர் ஒப்பனையாளர்-மேடையலங்கரிப்பாளர்) அத்தோடு அறிவிப்பாளராகவும் மேடைப்பேச்சாளராகவும் ஒலிஒளி அமைப்பாளர் இன்னும்...

தங்களது தந்தை பற்றி---

அந்தக்காலத்தில் ஸ்ரீ பரதர் பால்யசமாஜம் எனும் அமைபின் மூலம் பெரிய நாடகக்காரர்கள் பெரியநாடகங்கள் தயாரித்து அரங்கேற்றுவதோடு அந்த நாடகங்களுக்குரிய உடுப்புக்கள் முடிகள் அலங்காரப்பொருட்கள் கொடுப்பார்கள் அப்போது தோட்டவெளி மற்றும் பல இடங்களில் ஒவ்வொருபங்கும் ஒவ்வொரு மேடைநாடகங்களைப்போடுவார்கள் அவர்களுடன் எனது தந்தை போவார் எனது தந்தை சிறந்த நகைச்சுவை நடிகர் எனது தந்தை வருகின்றார் என்றால் தனியொரு கூட்டம் வரும் நான் அதைநேரில் பார்த்திருக்கின்றேன். நானும் கூடப்போவதால் அவர்கள் செய்கின்ற ஒவ்வொருவிடையங்களையும் உன்னிப்பாக கவனிப்பேன் நிறையக்கற்றுக்கொண்டேன் அதன் பயனாக ஒப்பனைகள் போடுதல் மேக்கப் மேடையலங்காரம் லைட்செட்ரிங் போன்றவற்றினை கற்றுக்கொண்டேன்.

உங்களது நாடகத்தில் உங்களுக்கு பிடித்த நாடகம் என்றால்---
நான் 1966ம் ஆண்டு எழுதி நடித்த முதலாவது நாடகம் "சுமதி என் தங்கை" எனும் நாடகத்தினை மேடையேற்றினேன். பெரும்வரவேற்பும் பாராட்டும் பெற்றது அதேபோல் எனது இரண்டாவது நாடகம் "மலர்ந்த ரோஜா" 10வது நாடகம் "புனித ஞானப்பிரகாசியார் வரலாறு" நாடகம் இந்த நாடகம் இந்தியா ஈரோடு மூன்று இடத்திலும் இலங்கையிலும் மேடையேற்றினேன் நல்லவரவேற்பினை பெற்றதுடன் எனது பெயரையும் நிலைநாட்டியது.

தங்களது பணிக்காலம் பற்றி---
  • பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் 40 ஆண்டுகள் ஆலயப்பணி(சக்கிறிஸ்ரன்)திருப்பண்டப்காப்பாளர்இருந்திருக்கின்றேன்.அத்தோடு மறையாசிரியராகவும் இணைப்பாளராகவும்  இருந்திருக்கின்றேன்
  • மன்னார் நீதிமன்றத்தில் 10ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
  • 1966-2017 வரை கலைப்பணியோடு ஆலயப்பணியும் செய்துவருகின்றேன்.
  • 1971-2017 வரை பேசாலைக்கே உரித்தான உடக்குபாஸ் உடக்குகளுக்கு வர்ணம் பூசுதல் செய்துவருகின்றேன்.
  • ஓவியம் வரைதல் வயறிங்.பிளமிங் போன்ற வேலைகளையும் செய்வேன்.
  • தற்போது பேசாலை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவராக இருக்கின்றேன்.
  • :சாந்தி கலாமன்றம்" "யூலியஸ் கலாமன்றம்" இருமன்றங்களை உருவாக்கி நாடகங்களை அரங்கேற்றினேன் தற்போது உறக்கத்தில் உள்ளது.
  • தற்போது உள்ள வளர்கலை மன்றம் அந்தக்காலத்தில் வளர்பிறை மன்றம் எனறுதான் இருந்தது அருட்தந்தையின் ஒப்புதலோடு அதை வளர்கலை மன்றம் எனபெயர் மாற்றியவேளை நான் கலைநிகழ்ச்சிக்குப்பொறுப்பாக இருந்தேன்

கலைவாழ்வில் மறக்கமுடியாத விடையம் பற்றி---
நாடகத்துறைக்கு வருவதற்கு முன் இளம் வயதில் நீக்கிலாஸ் குருஸ் அருட் தந்தையவர்களின் திருநிலைப்படுத்தல் விழாவில் பெரிய நாடகம் ஒன்று போட்டார்கள் அதோடு சிறிய நாடகம் ஒன்று போடுமாறு அருட்தந்தை சொன்னார்கள் சிறிய நாடகமாக சோக்கரட்டீஸ் நாடகம்  போட ஆயத்தமானார்கள் அப்போது நான் போய் சோக்கரட்டீஸ்சாக நான் நடிக்கின்றேன் எனக்கேட்டேன். அதை ஒழுங்கு செய்த பெரிய கலைஞர்கள் என்னை பார்த்து நீ நடிக்க மாட்டாய் கதாப்பாத்திரம் தரவும் முடியாது. எனச்சொன்னதுதம் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.

 அருகில் கலியாணவிடு நடந்துதகொண்டு இருந்தது அங்கு சென்று நின்றவரிடம் மைக்கை தாருங்கள் என்று கேட்டேன் அவரும் தந்துவிட்டார் நான் மைக்கில் பழைய படங்களான மனோகரா கட்டப்பொம்மன் பராசக்தி போன்ற படவசனங்களை அதே தொனியில் பேசினேன் இடைவிடாது வெளியில் வந்தேன்  ஒருவர் ஓடிப்போய் எனக்கு முன்னாடி சவுண்டரிடம்(பாட்டுப்போடுவோர்) கேட்கின்றார். இந்த றெக்கோட் எப்பவாங்கினிங்க என்று அவர் சொல்கின்றார் அந்த அம்புறோஸ் தான் பேசிவிட்டு போறார். இந்த விடையம் அந்த சோக்கரட்டீஸ் நாடகக்குழுவுக்கு தெரியவருகின்றது. அடுத்த நாள் எனக்கு அழைப்பு அம்புறோஸ் நீரே சோக்கரடீஸ் ஆக நடியும் என்று சொல்லவும் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் நான் முதல் நடித்த நாடகம் அதுதான்.


நீங்கள் எழுதி நடித்த நாடகங்கள் பற்றி---
மேடைநாடகங்களாக….

1.    சுமதி என் தங்கை
2.    மலர்ந்த ரோஜா
3.    அம்புலியில் அப்பாத்தை
4.    பாசமா கடமையா
5.    வஞ்சிநாட்டு இளவரசி-இலக்கிய நாடகம்
6.    சிலுவையின் வெற்றி
7.    புனித செபஸ்தியார் வரலாறு-வரலாற்று நாடகம்
8.    ஏமாந்தான் ஏரோது இந்த இரண்டு நாடகங்களும் இந்தியாவில் மேடையேற்றப்பட்டு சிறந்த நாடகமென்று பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு சிறந்த எழுத்தாளர் சிறந்த இயக்குநர் எனபாராட்டி பொற்கிளி வழங்கப்பட்டது.
9.    விண்ணக மன்னன்
10.    புனித ஞானபிரகாசியார் வரலாறு-வரலாற்று நாடகம்
11.    அமலியின் ஆசை-வானொலி நாடகமும்
12.    கருணை நெஞ்சம்-வானொலி நாடகமும்
13.    நண்பனுக்காக-வானொலி நாடகமும்
14.    நாங்களும் மனுசங்கள்தான்
15.    ஏசு எங்கே பிறந்தார்
16.    அன்பின் அழைப்பு
17.    மனக்கோயில் உனக்காக
18.    பேசும் சிலை
19.    கல்லறைப்பூக்கள்
20.    சிறைதான் வாழ்வா
21.    அன்பின் அழைப்பு
22.    குடியால் விளைந்த கேடு
23.    கல்லறைப்பூக்கள்

தங்களின் அனுபவத்தில் இருந்து இளைஞர்யுவதிகளுக்கு---

கலை என்பது ஒரு பொக்கிஷம் அது யாவருக்கும் சொந்தமானது சிலருக்கு இயல்பாக அமைந்துவிடும் நன்மையை தரவல்லது நாம் கலையை நேசிக்க வேண்டும். அதையே சுவாசிக்க வேண்டும். நான் அதிகமான மேடைகளில் பேசிய விடையம்
கலையின் பெருமையை கலைஞன் அறிவான்
பிள்ளையின் பெருமையை தாய் அறிவாள்
மலரின் பெருமையை வட்டிக்குரங்கறியாது
என்பேன் எல்லோரும் தங்களை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கவேண்டும். கலையது அரிய பொக்கிஷம்.

மன்னாரில் தங்களுக்கு பிடித்த நாடகமும் நடிகரும் என்றால்---
பலர் இருக்கின்றார்கள்  நான் மன்னாருக்கு லைட்செட் கொண்டு போயிருந்தேன் இறுதிமூச்சு எனும் நாடகத்திற்கு அந்த நாடகத்தினை இயக்கியிருந்தார்  சூசைநாயகம் (நாவண்ணன்) அவர்கள் அதில் நடித்திருந்தார் கீதப்பொன்கலன் அவர்கள் மிகவும் அழகும் அருமையான நடிப்பும் அவரை கையங்கிள் என்றுதான் அழைப்பார்கள் அவர்கள் இருவரையும் பிடிக்கும் காரணம் அவர்களுடன் இணைந்து எழுதுகோள் எனும் பத்திரிகையும் நடத்தினோம் மறக்க முடியாதவை அந்தக்காலம்.

தங்களது நாடகங்களுக்கு உதாவியவர்கள் என்றால்---
எனக்கு நாடகத்திற்கு உதவியவர்கள் எனும்போது 1966ம் ஆண்டு சாந்தி கலாமன்றம் ஒன்றை உருவாக்கி அதன் வெளியீடாக சமதி எனது தங்கை எல்லோரும் புதிய நடிகர்கள் எனும் மேடைநாடகத்தினை அரங்கேற்றினேன். அப்போது என்னுடன் 35 கலைஞர்கள் என்னுடன் இருந்து எல்லாப்பணியும் செய்தார்கள் காலப்போக்கில் திருமணங்கள் வேலை மாற்றங்கள் ஏற்படவும் அங்கும் இங்குமாய் குறைந்து போனது அமைப்பின் உறுப்பினர்கள்…. இந்நேரத்தில் நினைவில் கொள்கின்றேன்.
   
தங்களுக்கு கலைச்சேவைக்கா கிடைத்த விருதுகள் பரிசுகள் பற்றி---
  • மன்னார் மாவட்ட சிறந்த மறையாசிரியர் விருது
  • வாழும்போதே வாழ்த்துவோம் மூத்தகலைஞர் விருது
  • சேவைநலன் பாராட்டுச்சான்றிதழ்கள்
  • கலாபூஷணம் அரச விருது
பேசாலைக்கிராமத்தில் நான் இரண்டாவது கலாபூஷணவிருது பெற்றவன். இத்தோடு பொன்னாடைபோர்த்தி பொற்கிளிதந்த பலநிகழ்வுகளும் உண்டு எனக்கு கலாபூஷணவிருது கிடைப்பதற்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கிய தேசியக்கலைஞர் எஸ்.ஏ.உதயன் எனது நாடக மாணவன் இந்நேரத்தில் நினைவில் கொள்கின்றேன்.

மன்னார் கலைஞர்களின் வெளிச்சமாய் திகழும் நியூமன்னார் இணையம் பற்றி---
மிகவும் நல்ல விடையம் என்றுதான் சொல்வேன் எமது முன்னோர்கள் பற்றியும் ஆண்ட அரசர்கள் பெருந்தலைவர்கள் பற்றியும் எல்லாவற்றினையும் எழுதிவைத்ததால் தானே நாம் இன்று அவற்றை படிக்கவும் பார்க்கவும் பேசவும் முடிகின்றது.
இல்லையானால் எமது பாரம்பரியம் எமக்கு தெரியாமல் அல்லவா போயிருக்கும் அப்படியானதொரு விடையத்தினைத்தான் நீங்கள் சேவையாக செய்கின்றீர்கள் தற்போதைய சூழலில் தேவையானவிடையமும் கூட மறைவாய் இருப்பவர்களை வெளியில் கொண்டு வருவதோடு அவர்களைப்பற்றி தெளிவினையும் வெளிப்படுத்துகின்றீர்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரிய விடையம் என்பேன்.

நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு-வை.கஜேந்திரன்

                                           






















    
கலைஞனின் அகம் கணணியில் முகம்....கலாபூஷணம் விருதுபெற்ற மணிக்குரலோன் அம்புறோஸ் குலாஸ் Reviewed by Author on September 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.