அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தீவு பகுதியில் மலேரியா நோயை பரப்பும் புதிய வகை நுளம்பினை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்

மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் 'அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி' என்ற நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் தீவு பகுதியில் குறித்த நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் 'அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி' என்ற நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் தீவு பகுதியில் குறித்த நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பத்து(10) நாள் வேளைத்திட்டம் இன்று புதன் கிழமை(6) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வேளைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் 'அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி' என்ற நுளம்பின் புதிய வகை காவி பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் எதிர் காலத்தில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகலவில் காணப்படுகின்றமையினால் ஆரம்பத்திலேயே குறித்த நுளம்பு இனத்தின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை உள்ளது.இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழைங்க வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த அவசர கலந்துரையாடலின் போது தேசிய மலேரியா தடை இயக்கத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத், மன்னார் உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கில்றோய் பீரிஸ், மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் உற்பட மலேரியா நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மலேரியா நோயை பரப்பும் 'அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி' என்ற நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் மலேரியா நோயின் தாக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில் அவற்றை முற்றாக அழிக்கும் வகையில் குறித்த பத்து நாள் வேளைத்திட்டம் முன்னெடுக்கும் வகையில் குறித்த அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.

-மன்னார் தீவு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மன்னார் தீவுப்பகுதியில் உள்ள கிராமங்களை 7 பகுதிகளாக பிரித்து ஒவ்வெரு பகுதிகளுக்கும் ஒவ்வெரு சுகாதார வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு,இவர்களுக்கு கீழ் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த வேளைத்திட்டம் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

-இதன் போது குறித்த பிரதேசங்களில் உள்ள பயன்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கிணறுகள் மற்றும் நீர் தொட்டிகள் போன்ற வற்றில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் தீவு பகுதியில் மலேரியா நோயை பரப்பும் புதிய வகை நுளம்பினை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் Reviewed by NEWMANNAR on September 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.