அண்மைய செய்திகள்

recent
-

வித்தியாவின் வழக்கு...கறுப்புக் கண்ணாடி அணிந்து விசாரணை......


புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை வழக்கின் ட்ரயல் அட்பார் நீதிமன்றின் நீதிபதிகளில் ஒருவரான மா.இளஞ்செழியன் நேற்றைய வழக்கு விசாரணையின் போது கறுப்புக் கண்ணாடி அணிந்து சுவிஸ்குமாரின் சட்டத்தரணியை பார்வையிட்டிருந்தார்.

இதே போன்று சுவிஸ்குமார் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணியும் கறுப்பு கண்ணாடி அணிந்து நீதிபதி இளஞ்செழியனை பார்வையிட்டார்.

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழ க்கு தமிழ்மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேம சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ரயல் அட்பார் நீதாய விள க்கத்தில் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகின்றது.

இந்த விசாரணையில் நேற்றைய தினம் எதிரி தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங் கள் நடைபெற்றன. இதன் போது 4ஆம், 07 ஆம், 09ஆம் எதிரிகள் சார்பில் ஆஜராகி இரு ந்த சட்டத்தரணி ஜெகதீஸ்வரன், குறித்த வழ க்கின் கண்கண்ட சாட்சியம் என சட்டமா அதிபர் திணைக்களத்தால் கூறப்படுகின்ற இலங்கேஸ்வரன் என்பவர் புங்குடுதீவு ஆலடி சந்தியில் நின்றதாகவும் அப்போது சுவிஸ் குமார் மற்றும் அவரது சகாக்கள், வெள்ளை வான் ஒன்றில் நின்றதாகவும், அப்போது சுவிஸ்குமார் கறுப்பு கண்ணாடி அணிந்து

 கொண்டிருந்ததாகவும், அந்த வழியாக வித் தியா சென்ற போது, சுவிஸ்குமார் வித்தியா வையே பார்த்து கொண்டிருந்ததாகவும் சாட் சியமளித்துள்ளார். இது தொடர்பில் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி ஜெகதீஸ்வரன், கறுப்பு கண்ணாடி அணிந்துள்ள ஒருவர் எங்கே பார்க்கின்றார் என எவ்வாறு கூற முடியும்?
நெல்சன் மண்டேலா, ஒபாமா போன்ற உலக பிரசித்தி பெற்றவர்களின் பாதுகாவல ர்கள்தான் இவ்வாறு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருப்பார்கள். தாங்கள் எங்கே பார்க்கின்றோம் என தமக்கு முன்னாள் உள் ளவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்கா கவே அவர்கள் அவ்வாறு கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார்கள். இந்த நிலையில் அரசு தரப்பு சாட்சி சுவிஸ்குமார் எங்கே பார்த்தார் என்பதனை எவ்வாறு கூறினார்?  என தனது வாதத்தை முன்வைத்தார்.

மேலும் தன்னுடன் கொண்டுவந்த கறு ப்பு கண்ணாடி ஒன்றையும் காட்டினார். இதனை பார்த்த நீதிபதி இளஞ்செழியன் சட் டத்தரணியை கண்ணாடி அணியுமாறு கூறி தன்னை பார்த்து கொண்டு வலது இடது பக்க முள்ள ஊடகவியலாளர்களை கண்ணாடி வழியாக பார்க்குமாறு கூறினார். எனினும் சட்டத்தரணி தலையை வலது பக்கம் திருப்ப முயல, இவ்வாறு தான் இலங்கேஸ்வரனும் சுவிஸ்குமார் எங்கே பார்த்திருப்பார் என கூறி யிருக்கின்றார் என நீதிபதி கூறினார்.

எனினும் அதனை மறுத்த சட்டத்தரணி 15 அடி தூரத்தில் ஒருவர் நின்றால், அவரை கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு பார் த்தால் எங்கே பார்க்கின்றார்? என கூற முடி யாது என கூறினார். இதனை அடுத்து சட்டத் தரணி வைத்திருந்த கண்ணாடியை தான் வாங்கி அணிந்த நீதிபதி இளஞ்செழியன் அதனூடாக சட்டத்தரணியை பார்வையிட்டார்.                                   


வித்தியாவின் வழக்கு...கறுப்புக் கண்ணாடி அணிந்து விசாரணை...... Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.