அண்மைய செய்திகள்

recent
-

50 பேர் உயிரிழப்பு 200-கும் அதிகமானோர் காயம் - அமெரிக்காவில் துப்பாக்கி சூடு


லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 50-கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உறுதி செய்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் 64 வயதான Stephen Paddock எனவும் அமெரிக்க வரலாற்றில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் ஒன்று எனவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் 200-கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய Stephen Paddock பொலிசாரால் கொல்லப்பட்ட நிலையில் அவரது தோழி Marilou Danley என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.முதல் இணைப்பு லாஸ் வேகாஸ், நெவாடா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

எந்திர துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த நபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.லாஸ் வேகாஸ் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடன இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் அடையாளம் தெரியாத நபர் திடீரென்று சரமரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான்.நட்சத்திர விடுதியின் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மீது, அதன் அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அலறி அடித்து ஓடியுள்ளனர். இருப்பினும் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கீழே சரிந்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து நெவாடா நகர் மற்றும் அருகாமையில் அமைந்துள்ள அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டுக் கொன்றதாகவும், குறித்த நபர் அமெரிக்கர் எனவும் தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவத்தை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


50 பேர் உயிரிழப்பு 200-கும் அதிகமானோர் காயம் - அமெரிக்காவில் துப்பாக்கி சூடு Reviewed by Author on October 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.