அண்மைய செய்திகள்

recent
-

யாழ் தனியார் வைத்தியசாலையில் 'கண் சத்திர சிகிச்சை' செய்த அனைவருக்கும் பார்வை பறிபோனது-ஒருவரது கண் முழுமையாக அகற்றல்-(படம்)



யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்  புரை பாதிக்கப்பட்ட பத்து பேர் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டனர்.

-எனினும் 50 வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு மீள் சிகிச்சை பெற்றுக்கொண்ட ஐவருக்கும் பார்வை முற்றாக பறி போயுள்ளதாக பாதிக்கப்படடவர்களின் உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏரம்பமூர்த்தி பூவலிங்கம் (வயது 57) என்பவரின் கண் முற்றாக அகற்றப்பட்டு விட்டதாகவும், இவ்விடையம் தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது வைத்திய நிர்வாகம் சரியான முறையில் பதில் அளிக்க வில்லை எனவும் பாதிக்கப்படடவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த வைத்திய சாலையில் கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை கண்ணில் கற்ராக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட 09பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகினர்.

அவர்களின் நோய் தீவிர மடைந்த நிலையில் 09பேரும் கடந்த 23ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சூசைப்பிள்ளை, பூவலிங்கள், சின்னத்தம்பி, செல்வராஜா, பசுபதி ஆகிய 5 பேருக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த 25ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரின் கண்ணில் பக்றீரியா தொற்று அதிகமாக காணப்பட்டதனால் அவரது கண்ணை அகற்ற வேண்டும் எனவும், இல்லை எனில் மூளைக்கு செல்லும் நரம்பினை நோய் தாக்கும் என வைத்தியர்கள் கூறி தனது அப்பாவின் இடது கண்ணை சனிக்கிழமை(28)  மதியம் வைத்தியர்கள் அகற்றியதாக பூவளிங்கத்தின் மகன் தெரிவித்தார்.

அதேவேளை ஏனைய நால்வரின் கண் பார்வை குணமடைவது 99 வீதம் சாத்தியமற்றது என கொழும்பு வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

அதேவேளை குறித்த தனியார் வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட நிபுனர் ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரனைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



யாழ் தனியார் வைத்தியசாலையில் 'கண் சத்திர சிகிச்சை' செய்த அனைவருக்கும் பார்வை பறிபோனது-ஒருவரது கண் முழுமையாக அகற்றல்-(படம்) Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.