அண்மைய செய்திகள்

recent
-

இறந்தவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாமா?

இறந்தவர்கள் தெய்வம் ஆவார்கள் என்று கூறுவார்கள். ஆனால் அதற்காக இறந்தவர்களின் புகைப்படத்தை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய விடயங்கள்?

அலங்காரத்திற்காக பயன்படும் எதையுமே பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஒரு படம் வைத்து பூஜை செய்தாலும் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடி ஆகியவை கண்டிப்பாக பூஜை அறையில் இருக்கக் கூடாது.

வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, அகல் விளக்கு மற்றும் இரண்டு அல்லது மூன்று குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது.

பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீரை வைத்திருக்க வேண்டும். அதேபோல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்.

பூஜை அறையை எப்போதும் தூசு, ஒட்டடை இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இறந்தவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாமா? Reviewed by Author on October 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.