அண்மைய செய்திகள்

recent
-

தமி­ழர்­கள் தனி­யாக நிற்­கும் சூழல் மீண்­டும் உரு­வா­கும்....


சிங்­கள தேசம் எமது சமா­தா­னக் கரங்­களை எட்டி உதைக்­கு­மே­யா­னால் நிச்­ச­ய­மாக நாம் மீண்­டெ­ழுந்து மீண்­டும் தனி­யாக நிற்­க­வேண்­டிய சூழ்நிலை ஏற்படும் என வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

முல்­லைத்­தீவு சிலா­வத்தை இளம்­ப­றவை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய மின்­னொ­ளி­யி­லான கால்பந்தாட்டத் தொடர் அண்­மை­யில் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்­றது.
அதில் விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்ததாவது:
முள்­ளி­வாய்க்­கால் பேர­வ­லத்­தி­லி­ருந்து மீண்­டெ­ழு­வோமா? என்று நாமே சந்­தே­கப்­பட்ட காலம் இருந்­தது.
ஆனால் இன்றோ, எமது இனம் அதி­லி­ருந்து மீண்டு சமா­தா­ன­மான சூழ­லில் வாழ்­வ­தற்­கு­ரிய அரசமைப்பு தயார் செய்­யப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.<அதிலே எமக்­குத் தேவை­யான காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள், எமக்­கான வடக்கு கிழக்கு இணைந்த பூர்­வீக பிர­தே­சம் இவை அனைத்தையும் ஒன்­றி­ணைத்த தீர்வு எமக்­குத் தீர்­வா­கக் கிடைக்­குமா? இல்­லையா? என்ற ஓர் இக்­கட்­டான நிலை­யில் இன்று நாம் உள்ளோம்.

நாம் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும் அவை கிடைக்­காது போனால் நிச்­ச­ய­மாக நாம் மீண்­டெ­ழுந்து தனி­யாக நிற்க வேண்­டிய சூழ்நிலை ஏற்படும் என்­பது நிதர்­ச­னம். எந்­த­வொரு இன­மும் தன்­னைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக எதிர்த்து நிற்­கும். அதே­போல் உரிமைகோரி எதிர்த்து நின்ற எமது இன­மும் அடக்­கப்­பட் டது.
அந்த அடக்­கு­மு­றைக்கு எதி­ரா­கப் போரைப் புரிந்து எமது மாவீ­ரர்­கள் தங்­க­ளது இன்­னு­யிர்­களை ஈர்ந்­த­னர்.
இன்று அவர்­கள், தமி­ழர்­களை விடு­த­லையை வேண்டி நிற்­கும் ஓர் இன­மாக உல­கத்­துக்கு அடை­யா­ளம் காட்­டி­யுள்­ள­னர்.
எனவே அவர்­க­ளின் இழப்­பு­கள் ஒரு­நா­ளும் வீண்­போ­காது எனத் திண்­ண­மாக நம்­பு­கி­றேன்– என்­றார்.

தமி­ழர்­கள் தனி­யாக நிற்­கும் சூழல் மீண்­டும் உரு­வா­கும்.... Reviewed by Author on October 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.