மன்னார் சு.சூசைப்பிள்ளை அவர்களுக்கும் பாதிப்பு...கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10நோயாளர்கள் தீவிர கிருமி தொற்று...
யாழ். தனியார் வைத்தியசாலையொன்றில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து நோயாளர்கள் தீவிர கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மன்னார் வி டத்தல்தீவினை சேர்ந்த இளைப்பாறிய உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.சூசைப்பிள்ளை அவர்கள பாதிக்கப்பட்டுள்ளார் என அவரது மகன் தெரிவித்தார் ,,,,,,
இந்நிலையில், தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையே தொற்று ஏற்பட காரணம் எனவும், முறையாக தொற்றுநீக்கப்படாத உபகரணங்களை பாவித்து சத்திர சிகிச்சை மேற்கொண்டமையே இதற்கு காரணம் என்றும் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சனிக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று இவர்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதுடன், கண்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான காரணம் வைத்திய நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவருகின்றது. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகியிடம் விளக்கம் கோரிய போதிலும் அதற்கு உரிய பதில் கிட்டவில்லை என நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தூர தேசத்தில் இருந்து வரும் தாங்கள் பணத்தை கொடுத்தாவது விரைவில் குணமாகி செல்லலாம் எனும் நோக்கில் தனியார் வைத்தியசாலைகளை நாடி வந்ததாகவும், இங்கு பணத்தை கொடுத்தும் இவ்வாறான தரமற்ற செயல்களால் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் சு.சூசைப்பிள்ளை அவர்களுக்கும் பாதிப்பு...கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10நோயாளர்கள் தீவிர கிருமி தொற்று...
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment