அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளை நம் அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டனர்


தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று பதின்மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.

வவுனியாவில் நடந்த வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் மீண்டும் வவுனியா நீதிமன்றுக்கு தமது வழக்கை மாற்ற வேண்டும் எனக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஏலவே பல தடவைகள் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக உணவொறுப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

அவ்வாறு போராட்டம் நடத்தும் போது தமிழ் அரசியல் தலைவர்கள் அவர்களை நேரில் சென்று பார்வையிடுவர். சில உறுதிமொழிகளை வழங்குவர்.

அந்த உறுதிமொழிகளை நம்பி - ஏற்று உணவொறுப்புப் போராட்டத்தைக் கைவிடுவர். அந்தளவோடு அந்த விடயம் நின்று போகும்.

உறுதிமொழி வழங்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் தாங்கள் வழங்கிய உறுதிமொழிகள் பற்றி இம்மியும் சிந்திக்க மாட்டார்கள். அது தொடர்பில் நடவடிக்கையும் எடுக்கார்.

தமிழ் அரசியல் கைதிகள்  பாவங்கள். எப்போதுதான் அவர்கள் இந்த உலகப் பொது வெளியைப் பார்க்கப் போகிறார்கள், நடமாடப் போகிறார்கள் என்ற பரிதவிப்பு மனிதநேயம் மிக்கவர்களை வாட்டும். இதுதவிர, வேறு எதுவும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நடப்பதில்லை.

உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு உடன்பாடில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.

இதற்கு சில காரணங்களை அவர்கள் தங்களுக்குள் வைத்துள்ளனர். அதில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைப் புலிகள் என்றும் அவர்கள் விடுதலை பெறுவது தமது அரசியல் எதிர்காலத்துக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் நினைப்பு.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதி கள் விடுதலை பெற்று தேர்தல் களத்தில் இறங்குவார்களாக இருந்தால் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வர் என்பதுடன் அவர் கள் தொடர்பில் எதிர்மறையான எந்தப் பிரசார மும் செய்ய முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலை யும் ஏற்படும் என்ற கருத்தியலின் அடிப்படையி லேயே தமிழ் அரசியல் கைதிகளின் விடுத லையை தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் வலியுறுத்த மறுத்தும் மறந்தும் விடுகின்றனர்.

தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் இருக்குமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அடிக்கடி பேச்சு நடத்தி அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவேயில்லை.

இப்போது தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவில் இருந்து அநுராத புரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் இது பற்றி தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஏதே னும் தெரியுமா என்பது ஆராயப்பட வேண்டிய தாகும்.

நிலைமை இதுவாக இருக்கையில், சிறைக் குள் இருந்து கொண்டு உணவை ஒறுப்புச் செய்து போராடும் நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையுள்ளது.


தமிழ் அரசியல் கைதிகளை நம் அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டனர் Reviewed by Author on October 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.