அண்மைய செய்திகள்

recent
-

உண்மையான வீரன் வெற்றி,தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்-றிப்கான் பதியுதீன்-(படம்)



விளையாட்டு என்பது எமது வாழ்வின் ஒரு அங்கம்.அதே போன்று எமக்கிடையே ஒரு ஒற்றுமைப்பாதையினை உருவாக்கக்கூடிய ஒரு அம்சமாகத்தான் இந்த விளையாட்டு காணப்படுகின்றது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பட்ட முசலி கிராம இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை  இடம்பெற்றது

பல கிராமங்களிலும் இருந்து பல விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

நான் பல கிராமங்களில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்விற்கு சென்றிருக்கின்றேன். சில சாந்தப்பங்களில் இறுதிச்சுற்றில் வெற்றி தோல்வியடையும் அணிகள் சண்டையிடுவதனையும் பார்த்திருக்கின்றேன். நாங்கள் ஒன்றை புறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் தோல்வியடைந்தால் தான் மற்றவர் வெற்றியடைய முடியும். ஒரு உண்மையான வீரன் அவை இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அவ்வாறு தோல்விகளை ஏற்றுக்கொள்ளாமல் நாங்கள் சண்டையிடுவது எமது சமூகத்தில் இருக்கும் நெருக்கத்தினை நமே நாசமாக்குவது போலாகும்.

 எமது மார்க்கம் தெளிவாக சொல்லி இருக்கின்றது இந்த ஒற்றுமைபற்றி.

 எனவே நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது சமூகத்தை பிளவுபடுத்த விடக்கூடாது.

 அது அரசியல் ரீதியானாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி ஏனைய விடையங்களானாலும் சரி நாங்கள் பிரிந்து செயல்பட கூடாது .

உங்களுக்கு தெரியும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முசலி மண்ணிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உங்கள் மண்ணிற்காக இருந்தார்.
 ஆனால் இன்று அவர் அடையாளமின்றி உள்ளார். காரணம் தனியான முறையில் பயணிக்க முற்பட்டது தான்.

 அதே போன்று மாகாண சபை தேர்தலில் என்னுடன் இணைந்து சகோதரர் அலிகான் ஸரீப் போட்டியிட்டார்.

 இறைவன் நாட்டம் அன்று அவருக்கு மாகாண சபை உறுப்பினராக இறைவன் நாடவில்லை .

ஆனால் எமது தேசியத்தலைவர் அவர்கள் மக்கள் மீது கொண்ட பாசம் சமூக அக்கறை என்பன ஒன்றிணைந்து இன்று உங்களுக்கு ஒரு பிரதிநிதியை தந்திருக்கின்றது.

 எனவே இளைஞர் இந்த நாட்டினதும் நாட்டின் அபிவிருத்தியினதும் முதுகெலும்பு .

அவ்வாறு சக்தி படைத்த நீங்கள் ஒற்றுமையாக இருந்து உங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். எனவே நாமும் உங்கள் கிராமத்தின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வளர்ச்சியிலும் முழு பங்களிப்பு வழங்குவோம் என மேலும் தெரிவித்தார்.



உண்மையான வீரன் வெற்றி,தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்-றிப்கான் பதியுதீன்-(படம்) Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.