அண்மைய செய்திகள்

recent
-

"நாட்­டின் கடன் தொகை 10.2 திரில்­லி­யன் ரூபா"


மக்­கள் விடு­தலை முன்­னணி தலை­வர் உண்­மை­யான கடன் தொகை குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று கூறு­கின்­றார். ஆனால் நான் வரவு -– செல­வுத் திட்­டத்­தில் மூன்­றாண்­டுக்­குச் செலுத்த வேண்­டிய கடன் தொகை­யைக் குறிப்­பிட்­டேன். நாட்­டின் மொத்த கடந்த தொகை 10.2 திரில்­லி­யன் ரூபா­வா­கும். இவ்­வாறு தெரி­வித்­தார் நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர.
நாடா­ளு­மன்­றில் நேற்று வரவு– – செல­வுத் திட்­டத்­தின் இரண்­டாம் வாசிப்­பின் இறு­தி­நாள் விவா­தம் நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தாவது

தற்­போது கூட்டு எதிர்­கட்­சி­யி­னர் வர­லாற்றை மறந்­துள்­ள­னர். மன்­னிக்­க­வும், இவர்­களை எதிர்க்­கட்சி என்று கூறு­வ­தை விட கூட்டு கும்­பல் என்று கூறு­வது சிறந்­தது என்று நினை­கின்­றேன். முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் சபை­யில் உரை­யாற்­றி­யி­ருந்­தார். ஆனால் அவர் நிதி அமைச்­ச­ராக முன்­வைத்த வரவு –செல­வுத் திட்­டங்­களை மறந்­துள்­ளார்.
அவர் தனது வரவு – செல­வுத்­திட்­டத்­தில் அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளின் விலை­களை அதி­க­ரித்­தார். மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லா­மல் செய்­த­னர். வாக­னங்­க­ளின் வரியை அதி­க­ரித்­த­னர். ஆனால் தனது மக­னுக்­காக “ரேஸ்” கார் வரியை நீக்­கி­னர். முழு நாட்டை சீர­ழித்த வரவு – செல­வுத்­திட்­டத்­தையே முன்­வைத்­த­னர்.

நாம் அப்­ப­டி­யல்ல. நாட்டு மக்­க­ளுக்கு செவி­கொ­டுக்­கும் அர­சா­கும். அர­சி­யல் ரீதி­யான மறு­சீ­ர­மைப்­பு­களை முன்­னெ­டுத்து வந்­தா­லும் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­பும் அவ­சி­ய­மா­கும். பத­விக்கு வந்த பிறகு கருத்துச் சுதந்­தி­ரம் வழங்­கப்­பட்­டது. அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­னோம். முன்­னைய ஆட்­சி­யின்போது பொரு­ளா­தார ரீதி­யில் பெரி­ய பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன.

இதனை நாம் சுமக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த 10 ஆண்­டு­க­ளில் உள்­நாட்டு மாத்­தி­ரம் மைய­மாக வைத்து பொரு­ளா­தாரக் கொள்கை வகுக்­கப்­பட்­டது. மறை­முக வரியை விட­வும் நேரடி வரியை அதி­க­ரிக்கத் திட்­ட­மிட்­டுள் ளோம். முத­லீ­டு­களை அதி­க­மாக நாட்­டுக்கு கொண்டு வர­வுள்­ளோம். பசுமை பொரு­ளா­தா­ரத்தைக் கொண்டு வர­வுள்­ளோம். மூல­தனச் சந்­தையை விரி­வாக்­க­ வுள்­ளோம்.
போட்­டி­தன்மை அதி­க­ரிப்­ப­தன் ஊடாக பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்த முடியும். போட்­டி­யிட நாம் தயா­ராக வேண்­டும் என்­றார்.


"நாட்­டின் கடன் தொகை 10.2 திரில்­லி­யன் ரூபா" Reviewed by Author on November 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.