அண்மைய செய்திகள்

recent
-

2100-ம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் -


கடந்த 2012 ஆம் ஆண்டு ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இஸ்ரோவின் துணை அமைப்பு, இந்திய கடற்கரையோர மண்டலங்கள் என்ற தலைப்பில் ஆய்வொன்றை நடத்தியது.
அந்த ஆய்வு அறிக்கையில், சென்னை நகரை சூழ்ந்துள்ள அபாயம் பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.
2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடலில் மூழ்கும்.

மொத்தம் 3 ஆயிரத்து 29 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பு கடலால் விழுங்கப்படும், இந்த பகுதிக்குள் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், கட்டுமானங்கள் அனைத்தும் அழிந்து போகும்.
இதில் 218.54 கி.மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், 85.66 சதுர கிலோ மீட்டர் ரெயில்வே கட்டமைப்புகள், 497.65 சதுர கிலோ மீட்டர் விளை நிலங்கள், 826 கிலோ மீட்டர் நிலத்தடி நீர்ப்படுகைகள் கடலுக்குள் மூழ்கி விடும்.

வடசென்னையில் கடற்கரை ஓரமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இந்த எச்சரிக்கை பகுதியில்தான் அமைந்துள்ளன.
சென்னையில் 3.11 சதுர கிலோ மீட்டர் தொழிற்சாலை கட்டமைப்புகள், எண்ணூர் முழுவதும் நீரில் மூழ்கி விடும். வல்லூரில் உள்ள டென்ஜிகோ, என்டெக்வின், எண்ணூரில் உள்ள மின் பகிர்மான நிலையங்கள், காமராஜர் துறைமுகம், எண்ணை உற்பத்தி நிலையங்கள், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், மணலி பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையின் பெரும்பகுதி கடலால் விழுங்கப்பட்டு விடும்.
தகவல் தொழில்நுட்ப நகரம் முற்றிலும் பாதிக்கும். பள்ளிக்கரணையில் தோன்றியிரக்கும் குடியிருப்புகள், செய்யூர் மின் உற்பத்தி ஆலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கடலூரில் உள்ள ஐ.எல், எப்.சி. ஆலைகள், அமையவிருக்கும் நாகார் ஜுனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, தூத்துக்குடியின் தொழிற்சாலைகள், உப்பு ஆலைகள், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீரில் மூழ்கி விட வாய்ப்பு உள்ளது.

கண் எதிரில் ஆபத்து தெரிகிறது, அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கடற்கரை வய மையத்தை சேர்ந்த அதிகாரி பூஜா குமார் கூறியுள்ளார்.
இதற்கு கடற்கரை ஓரங்களில் பெருகி வரும் நெரிசலை குறைக்க வேண்டும், உள்பகுதியை நோக்கி நகரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
2100-ம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் - Reviewed by Author on November 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.