அண்மைய செய்திகள்

recent
-

33,293 அகதிகள் உயிரிழப்பு: திடுக்கிடும் புள்ளிவிபரங்களை வெளியிட்ட பத்திரிக்கை


ஐரோப்பாவை அடைய முயற்சிக்கையில் கடந்த 1993-லிருந்து கடந்த யூன் 15-ஆம் திகதி 2017-ஆம் ஆண்டு வரை மொத்தம் 33,293 பேர் உயிரிழந்துள்ளதாக ஜேர்மனியின் பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஜேர்மனியில் தொடங்கப்பட்ட பழமைவாய்ந்த பத்திரிக்கையான Der Tagesspiegel தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. துருக்கியை சேர்ந்த ஓவியரான Banu Cennetoglu என்பவர் இது சம்மந்தமான ஆய்வுகளை சில காலம் நடத்தியதாகவும் Der Tagesspiegel பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் கடும் கட்டுப்பாட்டுக் கொள்கையால் தான் இத்தனை பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவின் அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2017-ல் இதுவரை 152,203 பேர் கடல் மூலம் ஐரோப்பாவை அடைய முயற்சித்ததாகவும், அதில் 2992 பேர் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-லிருந்து கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தெற்கு ஐரோப்பியாவை நோக்கி ஆபத்தான பயணத்தை மேற்க்கொண்டுள்ளனர். இதனிடையில் 33,293 பேர் உயிரிழந்தது என்பது மிக பெரிய எண்ணிக்கையாகும் என சமுகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

33,293 அகதிகள் உயிரிழப்பு: திடுக்கிடும் புள்ளிவிபரங்களை வெளியிட்ட பத்திரிக்கை Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.