அண்மைய செய்திகள்

recent
-

கிளி. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் தியாகராசாவின் தாயார் பொதுச்சுடர் ஏற்றினார்! -

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் பொதுச்சுடரினை லெப்.கேணல் தியாகராசா, லெப்.தியாகமலர், லெப்.தியாகவிழி ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தவமணி அவர்கள் ஏற்றிவைத்தார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழ் தேசிய உணர்வாளர்களது ஒழுங்கமைப்பில் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
அலைகடலென பெருமளவான, மாவீரர்களது உறவுகள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியாக வணக்கம் செலுத்தியிருந்தார்கள். தமிழீழ தேசிய மாவீரர் நாள் மரபுகளுக்கமைவாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வணக்க எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டு மாவீரர் வணக்க நேரத்திற்காகக் காத்திருந்து அந்த நேரம் நெருங்கியதும் அகவணக்கம்த்தினையடுத்து மணியோசை எழுபப்பட்டு பிரதான சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களது பெற்றோர், உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டன. சமநேரத்தில் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளே...' எனும் மாவீரர் வணக்கப்பாடல் இசைக்கப்பட உறவுகள் உணர்வெழுச்சி மேலிட தமது உறவுகளை எண்ணி கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர்.

தமிழர் மீது திணிக்கப்பட்ட போர் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிதைத்தழிக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்பட்டதனை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் யாரும் செல்ல முடியாத இராணுவ அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் காணப்பட்டன.
தமிழர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்திய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களை அச்சுறுத்திய இராணுவ ஒட்டுக்குழுக்களின் அடாவடிகளும் ஓரளவுக்கு அகன்று சென்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் தற்துணிவாகச் சென்ற மாவீரர்களின் உறவினர்களான தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலராது முயற்சியால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்-27 மாவீரர் நாள் அண்று 7 வருடங்களின் பின்னர் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய அச்சமான சூழ்நிலையில் மாவீரர் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரது கோரிக்கைக்கமைவாக மக்கள் பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர்-27 அன்றைய மாவீரர் நாளில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பிரதான மாவீரர் பொதுச்சுடரினை ஏற்றி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடரந்து இம்முறை கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர்-27 இன்றைய தினம் மாவீரர் நாள் நிகழவுகள் பெருமளவான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நடைபெற்றுள்ளன.
இம்முறை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கிளி. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் தியாகராசாவின் தாயார் பொதுச்சுடர் ஏற்றினார்! - Reviewed by Author on November 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.