அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் காவிய தலைவர் பிரபாகரன்



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் இன்று.
ஒரு தூய்மையான தலைவனாக நின்று தமிழ் மக்களை வழிப்படுத்திய தலைவர் பிரபா கரனின் இலட்சியப் பயணத்தில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் சேர்ந்து பயணித்தனர்.

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வும் வளமும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலட்சிய மாக்கி அதனையே தமது குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே அனைத்து அர்ப் பணிப்புக்களையும் செய்த ஒரு மகத்தான  காவியத் தலைவனாக வே.பிரபாகரன் உலக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

தலைவர் பிரபாகரனின் ஒழுக்கம், நேர்மை, திறமை இவற்றை அவரின் எதிரிகளும் போற்று வர் எனில் அத்தகையதோர் கிடைப்பனவு எதிர் வரும் காலங்களில் எந்தத் தலைவனுக்கும் வாய்க்காது எனத் துணிந்து கூறமுடியும்.
அந்தளவுக்கு தலைவர் பிரபாகரனின் கட் டுப்பாடுகளும் ஒழுக்கமுறைமைகளும் உன்னத மானவையாக இருந்தன.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் தலைவன் தனித்து விடுதலைப் போராட்டம் பற்றி மட்டும் சிந்திக்காமல் போராட்டம் நடந்து கொண்டிருக் கும்போது சமநேரத்தில் தான் சார்ந்த மக் களின் சமூக, பொருளாதார, கலை கலாசாரப் பண்பாட்டு விழுமிய நிலைகளிலும் கவனம் செலுத்தி அவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்தை தலைவர் பிரபாகரன் தனது நடைமுறை வாழ்வில் செய்து காட்டியவர்.
அதனால்தான் விடுதலைப் புலிப் போராளி கள் பற்றியும் அவர்களின் நிர்வாகக் கட்டமைப் புகள் பற்றியும் உலகப் பிரதிநிதிகள் வியந்து போற்றினர்.
கூடவே தலைவர் பிரபாகரனின் நாமத்துக் காகவே இட்ட கட்டளையை நிறைவேற்ற தம் உயிரையே ஆயுதமாக்கிய தியாகங்கள் எத் தனை எத்தனை.

இப்படி நடந்தது என்று இனிவரும் காலங் களில் கூறினால், அதனை நம்புவதற்குக்கூட இளம் சமூகம் தயாராக இல்லை என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கை கள் கால சூழ்நிலைகளுக்கேற்ப நெகிழ்வின் றிப் பயணித்திருந்தாலும் தலைவர் பிரபாகர னின் விடுதலைப் போராட்டம் அப்பளுக்கற்றது என்பதை எவரும் மறுத்துரைக்கமாட்டார்.
இத்தகையதொரு தலைவன் உலகில் எந்த இனத்துக்குக் கிடைத்திருந்தாலும் அவர்கள் அந்தத் தலைவனை முன்னிறுத்தியே தமது உரிமையை வென்றெடுத்திருப்பர்.
ஆனால் எங்கள் மண்ணில் தமிழ் அரசியல் வாதிகள் தங்களின் சொந்தப் பகையைத் தீர்த்துக் கட்ட நினைத்தனர். தலைவர் பிரபா கரன் என்றோ, அன்றி விடுதலைப் புலிகள் அமைப்பு என்று கூறுவதையோ அவர்களில் பெரும்பாலானவர்கள் தவிர்த்துக் கொண்ட னர்.

ஆக, தேர்தல் காலங்களில் மட்டும் தலை வர் பிரபாகரனின் நாமத்தை உச்சாடனம் செய்து தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெறு கின்ற அளவில் எங்கள் நிலைமை ஆயிற்று என்பதை நினைக்கும்போது தலைவர் பிரபா கரனை தம் இதயங்களில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ் உறவுகள் கலங் கவே செய்வர்.
 -நன்றி-வலம்புரி-


தமிழர்களின் காவிய தலைவர் பிரபாகரன் Reviewed by Author on November 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.