அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நாளில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர்: சொத்து மதிப்பு இவ்வளவா? -


உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ், முதலிடம் பிடித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நவம்பர் மாதம் 25-ஆம் திகதி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் மாதமான நவம்பர் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையையை மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் பிளாக் பிரைடே வாக கொண்டாடுவார்கள், இதனால் இந்த தினங்களில் மட்டும் பெரிய நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் மிகப் பெரிய சலுகைகளுடன் விற்பனையைத் துவக்கும்.
இதன் ஒரு பகுதியாக தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதை விடுத்து வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

இதையடுத்து இந்த பிளாக் பிரைடே தினத்தில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் பிரபலமான அமேசான் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ், உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது மொத்த சொத்து மதிப்பும் 100 பில்லியன் டொலர்கள் உயர இது காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது
ஒரே நாளில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர்: சொத்து மதிப்பு இவ்வளவா? - Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.