அண்மைய செய்திகள்

recent
-

எகிப்தில் 300 பேரை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதல்: அஞ்சலி செலுத்த நள்ளிரவில் ஈபிள் டவரில் மாற்றம் -


எகிப்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பாரிசில் உள்ள ஈபிள் டவர் நள்ளிரவு அணைக்கப்படும் என்று பிரான்ஸ் நாட்டு மேயர் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் உள்ள மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டபரின் விளக்குகள் நள்ளிரவு அணைக்கப்படும் என்று பிரான்ஸ் நாட்டு மேயர் Anne Hidalgo தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், எகிப்தில் கடந்த வெள்ளிக் கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி பலர் காயமடைந்துள்ளனர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாரிசில் உள்ள ஈபிள் டவரின் விளக்குகள் அணைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் 300 பேரை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதல்: அஞ்சலி செலுத்த நள்ளிரவில் ஈபிள் டவரில் மாற்றம் - Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.