அண்மைய செய்திகள்

recent
-

ஜாம்பவான் முரளிதரன் சாதனையை உடைத்து அஸ்வின் உலக சாதனை -


அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை இந்திய வீரர் அஸ்வின் படைத்துள்ளார்.
இலங்கை - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் வீழ்த்திய விக்கெட்கள் மூலம் மொத்தமாக 300 விக்கெட்களை வெறும் 54 போட்டிகளில் எடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி 56 போட்டிகளிலும், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 58 போட்டிகளில் 300 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்கள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
  1. அஸ்வின் (இந்தியா)
  2. டெனிஸ் லில்லி (அவுஸ்திரேலியா)
  3. முத்தையா முரளிதரன் (இலங்கை)
  4. ரிச்சர்ட் ஹாட்லி (நியூசிலாந்து)
  5. மல்கோல்ம் மார்சல் (வெஸ்ட் இண்டீஸ்)
ஜாம்பவான் முரளிதரன் சாதனையை உடைத்து அஸ்வின் உலக சாதனை - Reviewed by Author on November 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.