அண்மைய செய்திகள்

recent
-

நகங்கள் உடைந்து தோல் உரிந்தால் என்ன நோய்? யாருக்கு வரும்? -


பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு கால்சியம் மிகவும் அவசியம்.
இத்தகைய கால்சியம் நம் உடலில் குறைவாக இருந்தால், பல்வேறு நோயின் பாதிப்புகள் உண்டாகும்.
கால்சியம் குறைபாட்டால் வரும் பாதிப்புகள்?
  • நகங்கள் உடைவது, நகங்களில் தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கால்சியம் குறைபாடு என்று அர்த்தம்.
  • அடிக்கடி சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப் பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும்.
  • கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதி உண்டாகும்.
  • மன இறுக்கம், மிகுதியான அளவில் உடல் சோர்வு நிலையை அடிக்கடி சந்திக்கக்கூடும்.
யாருக்கெல்லாம் கால்சியம் குறைபாடு வரும்?
  • உணவுகளில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு கால்சியம் சத்தின் அளவு குறையும்.
  • கேஃபைன் நிறைந்த காபியை ஒரு நாளைக்கு பலமுறை குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கால்சியம் குறையும்.
  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சோடாவை குடிப்பதால், அதில் உள்ள கெமிக்கல் நம் உடலில் உள்ள கால்சியத்தை குறைத்துவிடும்.
நகங்கள் உடைந்து தோல் உரிந்தால் என்ன நோய்? யாருக்கு வரும்? - Reviewed by Author on November 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.