அண்மைய செய்திகள்

recent
-

அர­சி­யல் கைதி­களே தடுப்­பில் உள்­ள­னர்- நீதி அமைச்­சர்...


அர­சி­யல் கைதி­கள் சிறைச்­சா­லை­க­ளில் இருக்­கின்­றார்­கள் என்­பதை நீதி அமைச்­சர் தலதா அத்­துக்­கோ­ரள ஏற்­றுக் கொண்­டார். இருப்­பி­னும் 17 பேரே அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று அவர் தெரி­வித்­தார். அர­சி­யல் கைதி­கள் என்று எவ­ருமே இல்லை என்று அரச தரப்பு தொடர்ச்­சி­யா­கத் தெரி­வித்து வந்த நிலை­யில், நீதி அமைச்­சர் நாடா­ளு­மன்­றில் நேற்று இத­னைக் குறிப்­பிட்­டார்.

நீதித்­துறை, குற்­றச் செயல்­க­ளுக்கு பலி­யாக்­கப்­பட்­டோ­ருக்­கும் சாட்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மான உதவி மற்­றும்

பாது­காப்பு, குற்­றச்­செ­யல்­களை தடுத்­தல் ஆகிய திருத்­தச் சட்­ட­வ­ரைவு மற்­றும் உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பை­கள் சிறப்பு ஏற்­பா­டு­கள் சட்­ட­வ­ரைவு ஆகி­ய­வற்­றின் மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

நீதி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது:-வவு­னியா நீதி­மன்­றில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வழக்கு அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு வழக்­கின் சாட்­சி­யா­ளர்­க­ளின் கோரிக்­கைக்கு அமை­வா­கவே மாற்­றப்­பட்­டது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இரு­வரே சாட்­சி­யா­ள­ரா­க­வுள்­ள­னர்.</p>அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்­லை­யென்றே வழக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள வழக்­கின் சந்­தே­க­ந­பர்­கள் மேன்­மு­றை­யீடு செய்­தால் வழக்கை இட­மாற்ற முடி­யும்.

நாடு முழு­வ­தி­லு­முள்ள சிறைச்­சா­லை­க­ளில் 17 அர­சி­யல் கைதி­களே இருக்­கின்­ற­னர். இவர்­க­ளில் 10 பேர் தமி­ழர்­க­ளா­க­வும் 7 பேர் சிங்­க­ள­வர்­க­ளா­க­வும் உள்­ள­னர். இவர்­க­ளில் 12பேர் புதிய மக­சின் சிறைச்­சா­லை­யி­லும், 3பேர் திரு­கோ­ண­மலை சிறைச்­சா­லை­யி­லும், ஒரு­வர் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லை­யி­லும், ஒரு­வர் மொன­ரா­கலை சிறைச்­சா­லை­யி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றார்.

அர­சி­யல் கைதி­களே தடுப்­பில் உள்­ள­னர்- நீதி அமைச்­சர்... Reviewed by Author on November 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.