அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள தலைவர்கள் யாரையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை-டெலோ செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா-(video)

எந்த சிங்கள தலைவர்களையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. சிங்க தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு தலைவர்களாக இருப்பது எங்களுடைய ஆதரவினால் இல்லை. சிங்கள மக்களின் ஆதரவினால் என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் செயலாளர் நாயகம் சிரேஸ்ட சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று  சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

அரசியல் வாதிகள் வரலாம்.தலைவர்கள் வரலாம்.மாகாண சபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாம் போகலாம்.

ஆனால் எமது மக்கள் எங்களை நம்பியுள்ள மக்கள் இன்னமும் எங்களை நம்பிக்கொண்டுள்ள மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.

ஏமாற்றப்பட்டு விட்டோம் என மக்கள் ஒரு கனம் கருதுவர்களாக இருந்தால் அதன் முழுப்பொறுப்பையும் நாங்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் ஏற்க வேண்டி இருக்கும்.

-வரலாறு எங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டாது. இன்னுமொரு விடையம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமானது. எமது மக்கள் எதிர் பார்ப்பது எல்லாம் நேர்மையான, சுயநலமற்ற,கை சுத்தமான,சமூக உணர்வுள்ள வேற்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே.

பண பலம் கொண்டவர்கள், அதிகாரப்பின்னனி கொண்டவர்கள், ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசக்கூடியவர்கள்,அரசியலிலே ஆதிக்கம் செலுத்திய காலம் மழை யேறிப்போய் விட்டது என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.

இது பொது மக்களின் காலம்.சாதாரண பொது மக்கள் மத்தியில் இருந்து இளைஞர்கள்,பெண்கள்,புத்திஜீவிகள் என இப்படியாக பல தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் உற்பட நாங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான அடிப்படை தகைமைகள் அவர்களிடம் இருக்குமாக இருந்தால் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்கியாக வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அத்தகைய பணியிலே செயற்படுவதற்கான ஆக்கமும்,ஊக்கமும் மாத்திரமின்றி அழுத்தமும் கூட கொடுக்க வேண்டியுள்ளது.

தலைவர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.தலைவர் என்பவர்கள் யார்? அவர்களும் சாதாரண மக்களைப்போன்றவர்கள். அவர்களுக்கும் சாதாரண அபிலாசைகள், சாதாரண தேவைகளை கொண்டவர்கள் தான் தலைவர்கள்.எந்த ஒருவரும் பிறக்கும் போது தலைவர்களாக பிறப்பதில்லை.

தலைவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். ஆகவே இன்றைய நிலையிலே எங்களுடைய தலைவர்கள் தங்களுடைய பொறுப்புக்களை உணர்ந்து எதிர் காலத்திலும் தமிழ் மக்களை சரியான பாதையில் வழி நடத்திச் செல்வார்கள் என்று நீங்கள் நம்பலாம்.

அப்படிச் செல்ல தவரினால் இன்றைக்கு எமது மக்கள் மத்தியில் இருக்கின்ற தமிழ் தேசிய உணர்வலை சரியான தலைவர்களை குறிப்பாக இளைய தலைமுறையில் இருந்து அடையாளம் காட்டி அவர்களை முன்னுக்கு கொண்டு வருகின்ற அந்த சூழ்நிலை உருவாகி விடும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொருத்த மட்டிலே போராட்ட வாழ் எமது மக்களினால் எங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் போராடுவதற்கு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

எந்த சிங்கள தலைவர்களையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.காரணம் சிங்க தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு தலைவர்களாக இருப்பது எங்களுடைய ஆதரவினால் இல்லை.சிங்கள மக்களின் ஆதரவினால்.

சிங்கள மக்களின் ஆதரவு இல்லை என்றால் அவர்கள் தலைவர்களாக நீடிக்க முடியாது.நீடிக்க மாட்டார்கள்.நாங்களும் அவர்களைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.

ஆகவே எங்களுடைய தலைவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை,மக்களினால் தங்களின் கைகளினால் கொடுக்கப்பட்டுள்ள ஜனநாயக அரசியல் ரீதியான போராட்டத்திற்கான தலைமை என்கின்ற கூர்வாலை சரியாக பயண்படுத்துவார்கள் என்று நீங்கள் நம்பலாம்.

பயண்படுத்த தவரினால் அந்த வாலை நாங்கலே கீழே போடுவேமாக இருந்தால் அந்த வால் ஒரு போதும் நிறாகரிக்கப்பட்ட வாலாக இருக்காது.

அதனை கையிலே எடுத்து உரிய முறையில் பயண்படுத்துவதற்கும் இன்னொரு இளைய தலைமுறை அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஏதுவாக நின்று கொண்டிருக்கின்றது என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

முன்னாள் போராளிகள் மத்தியில் இருந்தும் எங்களினால் முடிந்த அளவுக்கு வேட்பாளர்களை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே நிறுத்த வேண்டிய கடமைப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றோம்.

-ஒன்று பட்டவர்களாக,ஒரே கொடியின் கீழ் அணி திறண்டவர்களாகவும்,ஒரே தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவும் தலைமையையும்,தலைவரையும் மதிப்பவர்களாக நாங்களும் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட்டால் எந்த சக்தியும்,சதியும் எங்களுக்குறிய ஒளிமயமான எதிர்காலத்தை எங்களிடமிருந்து முன் கூட்டியே பறித்தெடுக்க முடியாது என்பதினை தெரிவித்தக்கொள்ள விரும்புகின்றேன்-என தெரிவித்தார்.
(12-11-2017)




சிங்கள தலைவர்கள் யாரையும் தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை-டெலோ செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா-(video) Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.