அண்மைய செய்திகள்

recent
-

08 கிரகங்கள் கொண்ட புதிய சூரிய மண்டலம்: நாசா கண்டுபிடிப்பு -


நமது சூரிய மண்டலத்தைப் போலவே, எட்டு கிரகங்களை கொண்ட புதிய மண்டலத்தை நாசா கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘கெப்ளர் 90 என்றழைக்கப்படும் நட்சத்திரம் ஒன்றின் சுற்று வட்டப்பாதையில் எட்டு கிரகங்கள் சுற்றி வருவது தெரியவந்துள்ளது.
இது சுமார் 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நமது சூரிய குடும்பம் ஒரு நட்சத்திரனைச் சுற்றி பல கிரகங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரம் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கெப்ளர் 90 கிரகம், பூமியை போன்று பாறை போன்ற கிரகம் ஆகும். ஆனால், 14.4 நாட்களுக்கு ஒரு முறை அதன் நட்சத்திரத்தை சுற்றுகிறது. இதனுடைய ஒரு வருடம் என்பது பூமியில் இரண்டு வாரங்கள்தான்.
இதன் சராசரி வெப்பநிலை சுமார் 426 டிகிரி செல்சியஸ் என நாசா கூறியுள்ளது, கிரகங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு முன்னாள் கடந்து செல்லும் போது ஒளி மாறுபடும்.
கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி 2009இல் தொடங்கப்பட்டது, மேலும் சுமார் 1,50,000 நட்சத்திரங்களை கண்டறிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெப்ளர் 90 நட்சத்திர அமைப்பு, நமது சூரிய மண்டலத்தின் ஒரு சிறிய பதிப்பாகும் என ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வானியலாளர் ஆண்ட்ரூ வாண்ட்பர்பர்க் கூறி உள்ளார்.
இதற்கு முன்பும் கெப்ளர் அனுப்பிய ஆவணங்களை பயன்படுத்தி, சுமார் 2,500 தொலைவிலுள்ள உலகங்கள் இருப்பதை ஏற்கனவே வானியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

08 கிரகங்கள் கொண்ட புதிய சூரிய மண்டலம்: நாசா கண்டுபிடிப்பு - Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.