அண்மைய செய்திகள்

recent
-

பருவத்தீ சுப்பரமணியபாரதி....மகாகவி


பாட்டுக்குள்ளே
வையகத்தை போட்டு வைத்தான்
பாமரர்க்கும்  பரமனுக்கும் சேர்த்து-கவி
பாடிவைத்தான்

பல மொழிகள் கற்றுத்தேர்ந்து
பைந்தமிழே சிறந்ததென்றான்
பாரினிலே பல பச்சோந்திகளை-பற்றி
பறையறைந்தே பறந்து  சென்றான்

உலகமக்களின் உயர்வுக்கு
உழைத்த பெரும் சிந்தனையாளனே
உணர்வுகளின் உச்சத்தினை அச்சமின்றி
உரிமையை  உள்ளத்திலே எரியவைத்த தீயே நீ

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதான மொழியை காணோம் என்றாய்
செம்மொழியான தமிழை கவிதையிலும் -உன்
கலைப்படைப்பிலும் காணவைத்த கதிரவனே.....

பாட்டுத்திறத்தாலே இந்த வையகத்தை
பாலித்திட வேண்டுமென்று-நன்று
நீடு துயில் நீக்கி பாடிவந்த நிலா- தமிழ்
பாரெங்கும் உனக்கெடுப்பார் தமிழர் விழா....

எட்டயபுரம் தந்த முண்டாசுக்கவிஞனே
எட்டுத்திசையும்   எதிரொலிக்கும் -உம்புகழ்
எங்கள் முப்பாட்டனில் ஒருவனே
ஏற்றி போற்றுகின்றோம்  பாரதிபாவலனே.....


செந்தமிழை தன்கவியில்  கோர்த்துவைத்தான்
எந்தன் தமிழில் தன்கவியை பாடவைத்தான்

இளங்கவிஞர்-வை-கஜேந்திரன்

பிறப்புசுப்பையா சுப்பிரமணியன்
திசம்பர் 111882
எட்டயபுரம்தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு
இறப்புசெப்டம்பர் 11, 1921(அகவை 38)
சென்னைதமிழ் நாடு
இருப்பிடம்திருவல்லிக்கேணி
தேசியம்தழிழன்
மற்ற பெயர்கள்பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்
பணிசெய்தியாளர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர்பாரதிதாசன்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத் துணைசெல்லம்மாள்
பிள்ளைகள்தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)
கையொப்பம்


பருவத்தீ சுப்பரமணியபாரதி....மகாகவி Reviewed by Author on December 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.