அண்மைய செய்திகள்

recent
-

பிலிப்பைன்ஸ்: டெம்பின் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு


பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை தாக்கிய டெம்பின் புயலால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 20க்கும் புயல்களால் பாதிக்கப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை நேற்று முன்தினம் பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. இந்த புயலுக்கு டெம்பின் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் மிண்டானாவ் தீவை துவம்சம் செய்தது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால் சில கிராமங்களில் கரை புரண்டு ஓடிய வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. டெல் நார்ட்டே மாகாணத்தில் உள்ள சிபுகோ சலுக் நகரங்களில் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த புயலினால் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த புயலினால் டெல் நார்ட்டே மாகாணத்தில் சுமார் 127 உயிரிழந்துள்ளதாகவும், 72 பேர் காணாமல் போயிருப்பதாகவும் பேரிடர் மீட்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மிண்டானோவா பகுதியில் உள்ள சம்போங்கா தீபகற்பத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதவிர மற்ற பகுதிகளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் டெம்பின் புயலினால் பலியானோர் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மற்றொரு புயலுக்கு 46 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் ஒரு புயல் அந்நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிலிப்பைன்ஸ்: டெம்பின் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு Reviewed by Author on December 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.