அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வாக்களிப்பதற்கு 86 ஆயிரத்து 94 பேர் தகுதி-(படம்)


மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும்  முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு 66 ஆயிரத்து 94 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

-ஐந்து உள்ளுராட்சி மன்றங்களிலும் இருந்து  54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்களிப்பு  நிலையங்களில்  வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மன்னார் நகர சபை-இதனடிப்படையில் மன்னார் நகர சபைக்கு 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14 ஆயிரத்து 770 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

-இதற்கு அமைவாக உப்புக்குளம் பிரிவில் 3 ஆயிரத்து 73 பேரும், பள்ளிமுனை பிரிவில் 2 ஆயிரத்து 123 வாக்காளர்களும் , எழுத்தூர் பிரிவில் 2 ஆயிரத்து 879 வாக்காளர்களும், சாவக்கட்டு பிரிவுக்கு 1906 நபர்களும், சௌத்பார் பிரிவில் 2 ஆயிரத்து 342 பேரும், பனங்கட்டுகொட்டு பிரிவில் 1592 நபர்களும், பெற்றா பிரிவில் 855 நபர்களும், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் பிரதேச சபை-மன்னார் பிரதேச சபைக்கு 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22 ஆயிரத்து 468 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
.
இதனடிப்படையில் தலைமன்னாரில் 1203 வாக்காளர்களும், தலைமன்னார் பியர் கிழக்கில் 2 ஆயிரத்து 078 நபர்களும், துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1022 பேரும், பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1808 நபர்களும், பேசாலை தெற்கு 1807 பேரும், சிறுத்தோப்பு பிரிவில் 2 ஆயிரத்து 332 நபர்களும், புதுக்குடியிருப்பு பிரிவில் 1482 நபர்களும், எருக்கலம்பிட்டி பிரிவில் 2 ஆயிரத்து 888 வாக்காளர்களும், தாழ்வுபாடு பிரிவில் 2 ஆயித்து 699 நபர்களும், தாராபுரம் பிரிவில் 1560 நபர்களும், உயிலங்குளம் பிரிவில் 3 ஆயிரத்து 562 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நானாட்டான் பிரதேச சபை-நானாட்டான் பிரதேச சபைக்கு 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15 ஆயிரத்து 702 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் வங்காலை வடக்கில் 1917 வாக்காளர்களும், வங்காலை பிரிவில் 2 ஆயிரத்து 026 பேரும், நானாட்டான் பிரிவில் 1678 நபர்களும், வாழ்க்கைபெற்றான்கண்டல் பிரிவில் 2 ஆயிரத்து 577 பேரும், இலகடிப்பிட்டி பிரிவில் 2 ஆயிரத்து 313 பேரும், முருங்கன் பிரிவில் 2 ஆயிரத்து 040 நபர்களும், கற்கடந்தகுளம் பிரிவில் 1202 பேரும், கட்டையடம்பன் பிரிவில் 1999 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச சபை-மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவுக்கு 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18 ஆயிரத்து 636 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கு அமைவாக வெள்ளாங்குளம் பிரிவில் 1721 வாக்காளர்களும், பெரியமடு பிரிவில் 2 ஆயிரத்து 057 நபர்களும், இலுப்பைக்கடவை பிரிவில் 1515 பேரும், விடத்தல்தீவு பிரிவில் 2 ஆயிரத்து 126 நபர்களும், நெடுங்கண்டல் பிரிவில் 1493 பேரும், ஆட்காட்டிவெளி பிரிவில் 1501 நபர்களும், அடம்பன் பிரிவில் 1504 பேரும், வட்டக்கண்டல் பிரிவில் 1973 நபர்களும், மடு பிரிவில் 1769 பேரும், இரணைஇலுப்பைக்குளம் பிரிவில் 1308 பேரும், காக்கியான்குளம் பிரிவில் 1669 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முசலி பிரதேச சபை-முசலி பிரதேச சபை பிரிவில் 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14 ஆயிரத்து 518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றில் அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும், அரிப்பு கிழக்கு பிரிவில் 532 நபர்களும், பண்டாரவெளி பிரிவில் 1493 பேரும், புதுவெளி பிரிவில் 894 நபர்களும், சிலாபத்துறை பிரிவில் 1801 பேரும், அகத்திமுறிப்பு, கூழாங்குளம் பிரிவில் 1846 நபர்களும், பொற்கேணி பிரிவில் 1299 பேரும், மருதமடு, வேப்பங்குளம் பிரிவில் 2073 நபர்களும், கொண்டச்சி பிரிவில் 1757 பேரும், பாலைக்குழி பிரிவில் 1946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வாக்களிப்பதற்கு 86 ஆயிரத்து 94 பேர் தகுதி-(படம்) Reviewed by Author on December 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.