அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் அடுத்த முதல்வர் யார்? நேர் எதிர்திசையில் களமிறங்கும் மாவை- விக்னேஸ்வரன்? -


அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபை வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனும் நேர் எதிர் திசையில் நின்று போட்டியிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்

வட மாகாண சபைக்கான காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்தத் தேர்தலில் வட மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார் சிவசக்தி ஆனந்தன்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு ரெலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மாகாண சபைக்கான காலம் முடிவடையும் நிலையில், நடக்கும் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா போட்டியிடுவார்.

அவரை எதிர்த்து தற்போதைய முதலமைச்சர், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றார். வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் சார்ந்த நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் அவர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இந்தக் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரோ, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

தவிர, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனோ, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவோ எந்தவிதமான தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கின் அடுத்த முதல்வர் யார்? நேர் எதிர்திசையில் களமிறங்கும் மாவை- விக்னேஸ்வரன்? - Reviewed by Author on December 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.