அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்..கலையமுதன் கலாபூசணம் Dr.M.C.M இக்பால்

மன்னர் மண்ணின் கலைஞர்கள் தேடலில் விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்.......
நாடறிந்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான கலையமுதன் கலாபூசணம் டாக்டர் மர்ஹ M.C.M இக்பால்  அவர்கள் காலமாகி ஐந்தாண்டு நினைவையொட்டி.....

மன்னார் மாதலத்தின் குறிப்பிடத்தக்க கலைக்குடும்பமான புலவர் முகம்மது காஸிம் ஆலீம் அவர்களின் வாரிசுகளில் மூத்த எழுத்தாளரும்-இலக்கிய வாதியும்- கவிஞருமான கலாபூசணம் கலையமுதன் டாக்டர் M.C.M.இக்பால் அவர்கள் 1951-11-15ம் திகதி காஸிம் ஆலீம் புலவர் - சுகரா உம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனாக பிறந்தார்.
 கவுலா உம்மா எனும் துணைவியாரை கரம்பற்றி பாத்திமா றம்ஸானி- முகம்மது முசார்ப் அகிய இரு அன்புச் செல்வங்களின் தந்தையுமாவார்.

சிறு வயதில் தந்தையின் வழியில் நின்று இலக்கிய முயற்சியில் ஈடுபாடு மிக்க இவர் 1968களில் பள்ளிப்பருவத்தில் “பரீட்சையின் முடிவு” எனும் தலைப்பினில் தினபதியில் எழுதிய சிறுகதை மூலம் பத்திரிகையில் இலக்கிய உலகினில் காலடி வைத்தார்.

அன்றிலிருந்து......
  • தினகரன்
  • வீரகேசரி 
  • தினபதி-
  • சிந்தாமணி-
  • காற்று 
  • பொய்கை
  • இன்சான் நவமணிää
  •  ராணி
  • கல்கி
  • கற்கண்டு
  • தீபம் போன்ற இன்னோரன்ன பத்திரிகைகளில் கவிதை கட்டுரை சிறுகதை  விமர்சனம் தத்துவம்- உண்மைச்சம்பவம் நகைச்சுவை மொழிபெயர்ப்பு ஆன்மீகம் என பல கோணங்களிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. 

கலையமுதன் இக்பால் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை மன்னார் விடத்தல் தீவு அலிகார் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
மருத்துவப் பணியோடு எழுத்துத் துறையிலும் பிரகாசித்த இக்பால் அவர்கள் தனது எழுத்துக்கள் மூலம் சமுதாய சீர்கேடுகளையும் மாயைகளையும் தகர்த்தெறிந்தார். அத்தோடு மருத்துவ துறைசார் கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் எழுதிக்குவித்தார்.


இலங்கையில் இருந்து வரும் பத்திரிகை சஞ்சிகையில் கலையமுதனின் ஆக்கங்கள் கிரமமாக வெளிவந்த படியே இருக்கும்
“பாம்பு தேவதை” 
"அதிசய வனம்” ஆகிய தொடர் கதைகள் பலராலும் புகழப்பட்டதோடு
 நவமணி வாரப்பத்திரிகையில் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கட்டுரைகளை எழுதி “நவமணி சாதனையாளர்” என்ற கீர்த்தனையையும் பெற்றார்.

தினகரன் வாரமஞ்சரியில் கலையமுதனின் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த படியே இருந்தன். 1969களில் பொய்கை மாதாந்த பத்திரிகைக்கு அதிபராகவும் பணியாற்றினார்.

“இவரின் பணியில் நனைந்த மலர்கள் (கவிதை) கொடுக்கட்டியாறு” (நாவல்) என்பன அச்சேற தயாராக இருந்த நூல்களாகும். தமிழ் மொழியைப் போலவே ஆங்கிலம்-சிங்களம்-அரபு ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததோடு ஆங்கில மொழயில் பத்திரிகைத் துறைமாணிப் பட்டத்தையும்  (Bachelor of Journalism) பெற்றார்.


இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்
  •     மறை நிழலில் மனிதன்  1971(திருமறை பற்றிய சிறப்பு)
  •  ஏழை எழுத்தாளன் 1973 (சிறுகதைத் தொகுதி)
  • ஒரு கருவண்டு பறக்கிறது 1976 (சிறுகதைத் தொகுதி)
  •  கண்ணில் நிறைந்த கஃபா (புனித மக்கா யாத்திரை பற்றிய பயணக் கட்டுரை)
  •  மருத்துவக் கைந்நூல் 1981 (கற்கண்டு பிரசுரம்)
  • நான்-நீ-கடவுள் 2008-02-17 (உருவகக் கதைகள் புரவலர் புத்தகப் பூங்கா) 
M.C.M.இக்பால் அவர்களின் மருத்துவப்பணி......

யாழ் போதனா வைத்தியசாலையிலும் பின்னர் குவைத்-அபுதாபி-கட்டார் ஆகிய அரபு நாடுகளில் உள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் பின் குருணாகல் போதனா வைத்தியசாலையிலும் மருத்துவப் பணியாற்றினார்.



M.C.M.இக்பால் பட்டங்கள் விருதுகள்
  • யாழ் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் எம்.ஸி.எம் இக்பால் அவர்களின் பல்கலைக்கழக காலத்தில் இலக்கிய பணிகளைக் பாராட்டி "கலையமுதன்” எனும் பட்டமளித்து கௌரவித்தது.

  • வட புல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் பெரு விழாவிவில் கலையமுதனின் மருத்துவம் மற்றும் சமூக இலக்கியப் பணிகளைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • கட்டாரில் உள்ள மருத்துவ நிறுவனம் இக்பால் அவர்களின் மருத்துவ பணிகளின் நுட்பத்தினை பாராட்டி “சியோடா” விருது வழங்கி கௌரவித்தது.
  • 2007ம் ஆண்டு கலாசார மரபுரிமைகள் அமைச்சு இவரது 40ஆண்டுகளில் கலை இலக்கிய பணிகளைப் பாராட்டி “கலாபூசணம்” விருது வழங்கி கௌரவித்தது.
  • நீதி அமைச்சரினால் அகில இலங்கை சமாதான நீதவான் எனும் பட்டத்தையும் பெற்றார்.
  •  இலக்கிய உலகின் காலடி வைத்து நாற்பது வருடகாலம் தொடர்ச்சியாக இலக்கியப் பணியாற்றிய டாக்டர் இக்பால் சமூகத்தின் அக்கறைகளையே தனது படைப்புக்களில் பிரதிபலித்தார். 
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையே தனது இலக்கியங்கள் மூலம் அடையாளப்படுத்தினார். ஒரு “கருவண்டு பறக்கிறது” சமூகம் மீதான அவரது உணர்வுகளுக்கு உன்னதமான சாட்சியாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கலையமுதன் இக்பால் அவர்களின் பெயரும் புகழும் குன்றின் மேலிட்ட தீபமாய் என்றும் ஒளிரட்டும்!



தகவல்
புலவர் பேரன்
இமாம் ஹன்பல்  -அதிபர்...
 நியூமன்னார் இணையத்தின் தேடல் தொடரும் கலைஞர்களின் முகம் மலரும்........
தொகுப்பு-வை-கஜேந்திரன்
 

விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்..கலையமுதன் கலாபூசணம் Dr.M.C.M இக்பால் Reviewed by Author on December 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.